பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4

தஞ்சை மராட்டிய


அந்த ருமசந்திரருஜா ஞாயத்தோடே ருச்சியபரிபாலனம் பண்ணிக் கொண்டிருக்கையில் அவருக்கு பீம ருஜா என்கிறவர் பிறந்தார் = ரு =

அந்த பீமருஜா தற்மத்தோடேயும் நீதி யோடேயும் பிறசேகளை' பரி பாலனம் பண்ணிக் கொண்டிருக்கிற போது அவருக்கு ரெண்டாம் யெகொஜி ருஜா பிறந்தார் = க =

அந்த யெகொTருஜா தம்முடைய புசபெல பராக்கிறமத்தினலே சாத்தார கெடியை" சுவாதினமாக்கிக் கொண்டார். அதின் பிற்பாடு பாதஷாவுக்கும் இவருக்கும் உயித்திய பிறசங்கம் வந்த படியினலே" யிந்த துற்க்கத்திலே வாசம் பண்ணிக் கொண்டிருந்தார். அந்த ருஜாவுக்கு வராஹருஜா என்கிறவர் பிறந்

தார் = எ =

முக்கியமான ஆயுதங்களைத் தேவகரே சுத்தம் செய்து அரசரிடம் கொடுப்பார். ஆயுதங் களுக்குப் பூஜை செய்யும் போது, வலப் பக்கத்தில் போவாரும் இடது பக்கத்தில் தேவகரும், மத் தியில் அரசர் பேஷ்வாவோடும், உட்கார்ந்து பூஜை செய்வார்கள்.

மஹாராஜா சிம்மாசனத்தில் தர்பாரில் வீற்றிருக்கும் சமயத்தில், வலப்பக்கத்திலும் இடப் பக்கத்திலும், முறையே போவாரும் தேவகரும், எதிரில் பேஷ்வாவும் உட்காருவார்கள்.

விருதுகளில் பாக்கியுள்ள, யானைமேல் வைத்து முழங்கும் டமாரமும், யானையின் பேரில் ஏற்றியிருக்கும் பொற்பந்துகளுக்கிடையில் இலங்கும் பொன்மீனும், மற்ற ஆடம்பரமான எடுபிடி களும் பக்கத்திலும் பின்பக்கத்திலும் வரவேண்டியது.

தமக்குக் கிடைத்த இந்த விருதுகளைத் தவிரத் தம்மனதுக்குப் பிடித்த சில விருதுகளைத் தாமே ஏற்படுத்திக் கொண்டார். *

மகாராஷ்டிர தேசத்துக்கும் மகாராஷ்டிர ஜாதிக்கும் முக்கியமான வாகனம் பல்லக்காகையால் அப்பல்லக்குக்கு அலங்காரம் செய்யப்படும் சில விருதுகளை இதனடியில் எழுதுகிறேன்:

யானைத் தந்தத்தினால் செய்யப்பட்ட பல்லக்கின் பக்கங்களும், வளைவுகளும், ஒரே வெண் னிறப் பளபளப்புடன் பிரகாசித்தன. பல்லக்கின் மேல் விரிக்கும் பட்டும், பட்டுக் கயிறுகளும் பல்லக் கின் கொம்பில் முன்னும் பின்னும் தங்கத்தினால் அமைந்த யாளி முகமும், புலியின் வாயும். பல்லக் குக் கூண்டின் இரு கோடிகளிலும் கல்விழைத்த வாழைப்பூப் போன்ற கலசங்களும், நான்கு மூலை களிலும் கல்லிழைத்த நான்கு குஞ்சங்களும், ஜாலர்களும் இரண்டு பக்கங்களிலும் உள்ள தண்டு களுக்கு வெள்ளிக் கவசமும், அவற்றிலிருந்து தொங்கும் ஜரிகைக் குஞ்சங்களும், தொங்கட்டான் களும், பல்லக்கை அலங்கரித்தன. பல்லக்குக் கொம்புகளுக்குச் சில முக்கிய சந்தர்ப் பங்களில் பயன்படுத்துவதற்காக நவரத்தினக் கவசமும், தங்கக் கவசமும் அவற்றோடு விலையுயர்ந்த ஜரிகைக் குஞ்சங்களும் இருந்தன. பல்லக்கின் உட்புறத்தில் நிலைக்கண்ணாடியும், திண்டுகளும் வளைந்த கொம்பிலிருந்து தொங்கும் மயில் விசிறிகளும், வெள்ளித் தகடுகள் பதித்த உட்புறமும் அதன்மேல் பரப்பப்பட்ட வெண்மையான புஷ்பங்களும், தட்டுகளும் விளங்கின. கொம்பின் முன் புறத்தில் யாளி முகமும், அதன் மேல் புஷ்ப ஹாரங்களும், கல்லிழைத்த முத்துக் குஞ்சங்களும் கல் விழைத்த கவசமும், சில சமயங்களில் தங்கக் கவசமும் அழகு செய்தன. இரண்டு பக்கங்களிலுமுள்ள கொம்புகளுக்கு வெல்வெட்டினால் செய்யப்பட்ட உறைகள் உண்டு.

இவ்விருதுகளைத் தவிர முக்கியமான சந்தர்ப்பங்களில் விசேஷ விருதுகளும் இருந்ததாகச் சொல்லப்பட்டிருக்கிறது.' (குறிப்பு: இவை திருமுடி சேதுராமன் சுவடியில் இல்லை; மெக்கன்சி சுவடிகள் மூன்றிலும் இல்லை) 33. தற்மத்தோடேயும் நீதியோடேயும் பிறசேகளே - தர்மமார்க்கமாய்ப் பிரசைகளை (டி5119) 34. கெடி - கோட்டை சாத்தார் கெடியை வென்றது கி.பி. 1434 என்று திருமுடி சேதுராமன் சுவடி கூறும். 35. உயித்திய பிறசங்கம் வந்தபடியிஞலே' என்று விடத்துச் "சண்டை ஏற்படும் என்று' என்பது போ. வ. ச. (பக். 5) இல் உள்ளது.