பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மன்னர் வரலாறு

159

வரச் சொன்னார். ஆனால் அவர் வரவில்லை. பின்னர்ச் சிவாஜி சிற்துருக்கம் என்ற கோட்டையைப் பிடித்து அதற்கு மண்டனகட் என்று பேர் சூட்டினார்: சிருங்கார்ப்பூரைக் கைக்கொள்ள வேண்டுமென்று படையெடுத்துச் சென்றாள். சூரிய ராஜா ஒடிப் போய்விட்டார். அந்த இடத்தைக் கைப்பற்றித் திரியம்பக பாஸ்கரைப் பிரபாவளியில் இருக்கச் செய்து தாம் சிருங்கார்ப்பூரில் தங்கியிருந்தார். பின்னர்த் தெற்குப்பகுதியில் பெங்களுர் செஞ்சி ஆகியவற்றுள் செஞ்சியைக் கைப்பற்றி (கி.பி. 1677இல்), பிரஞ்சுக்காரருடன் கி.பி. 1680இல் உடன் படிக்கை செய்துகொண்டு, பூனாவுக்குத் திரும்பிச் சென்றார்.

அல்லியேதில் ஷாவும், அவுரங்லாகசீபும் சிவாஜியின் போர்த்திறமையை வியந்து, சிவாஜியோடு போர் செய்வது பயன்தாராதென்று நினைத்துத் தத்தம் இடத்திலேயே வாளா இருப்பது நல்லது என்று முடிவெடுத்தனர். எனினும் அவுரங்க சீபுக்குச் சிவாஜியை உயிரோடு பிடித்து அவரைக் கான வேண்டுமென்ற விருப்பம் இருந்தது; முடியவில்லை; ஆகையால் சிவாஜியின் உருவச் சித்திரத்தையாவது காணவேண்டுமென்று ஒரு சித்திரக்காரனை அனுப்பினார். அச்சித்திரக்காரர் பல தடவை முயன்றும்.சிவர்ஜியைக் காண முடியவில்லை. ஒரு நாள் சிவாஜி, மிக விரைவாகப் போகிறவர், குதிரை மேல் இருந்து கொண்டே சோளக்கதிரைப் பறித்துச் சோளத்தைத் தான் தின்று, குதிரைக்குச் செத்தையூட்டிக் கொண்டு, விரைந்து சென்றார். அச்சித்திரக்காரர் அக் காட்சியை வரைந்து அவுரங்கசீபுக்குக் கொடுத்ததும், அவுரங்கசீபு அக்காட் சியைக் கண்டு அத்தகையவரை வெல்வது எளிதன்று என்று முடிவெடுத்தார்.

7 பின்னர்ச் சிவாஜி, தன் தமையன் சம்பாஜியின் மனைவி மக்களையும் ராஜாபுரத்தில் இருக்கச் செய்தார். சம்பாஜியின் மகன் உமாஜி, உமாஜியின் மனைவி சகுக்பாயி. சக்குபாயிக்கு ஒருமகன் பிறந்தான். அவற்குப் பறசோஜி என்று பெயரிடப்பட்டது.

ஷாஜியின் மூத்த மனைவியின் மகன் ஏகோஜி ஆகையால் அவருக்கு ஷாஜியின் விருதுகள் யாவும் கொடுக்கப்பட்டன. அவர் தன் மனைவியர் திபா பாயி, சயிபாயி ஆகிய இருவருடன் சிறிது சைனியங்களுடன் பெங்களுர்க்கு அனுப்பப்பட்டார்.

ஏகோஜிக்குத் தீபாபாயியின் வயிற்றில் சகம் 1593இல் மூன்றாவது ஷாஜி பிறந்தார்.

இவ்வமயத்தில் அல்லியேதில்ஷா, ஏகோஜியின் நட்பைப் பெற்றால் தனக்கு நன்மை பயக்கும் என்று கருதி அவருடன் பேச்சு வார்த்தை நடத்தினார். ஏகோஜியும் ஏதில்கூடிாவின் விருப்பப்படி நடக்கலானார்.

இந்நாளில் தஞ்சை நாயக்கருக்கும் திருச்சி நாயக்கருக்கும் மன வேறுபாடு தோன்றியது. திருச்சியார் தஞ்சாவூர் பேரில் போர் தொடுத்தனர். தஞ்சை நாயக்கர் அல்லியேதில்ஷாவின் உதவியை நாடினார். ஏதில்ஷா, காதர்கலாஸ் கான் என்பவரையும் அப்துல்ஹலிம் என்பவரையும் அனுப்பினார். அவர்கள்

69-22