பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மன்னர் வரலாறு

171


9 சம்பாஜி ஆட்சி செய்கையில் அவுரங்கசீபு, அவுரங்கபாது என்ற ஊரில் எல்லாஅரசர்களையும் வரச் செய்தார். வந்த யாவரும் அவுரங்க சீபுக்கு வணக்கம் செலுத்தினர். ஆனால் சம்பாஜி மட்டும் வணங்கவில்லை. அவுரங்க சீபு சினம் கொண்டு சம்பாஜியைச் சிறைப்படுத்தினார். சில மாதங்களில் சம்பாஜி தப்பியோடினார். இதையறிந்த அவுரங்கசீபு ஒரு படையையனுப்பினார். அப்படை தோற்றது. பெரும்படை மீண்டும் சென்று சம்பாஜியைக் கைது செய்து கொணர்ந்தது. வணக்கம் செலுத்தினால் சம்பாஜியை விட்டுவிடுவதாக அவுரங்கசீபு கூறினார். சம்பாஜி வணங்கவில்லை. மீண்டும் சிறையில் வைத்துச் சின்னாள் பின்னர் ஓரிடத்தில் சிறிய வாசற்படி வைத்து அதன் வழியாய்ச் சம்பாஜியை அழைத்துவரச் சொன்னார். சம்பாஜி முதலில் காலை வைத்துக் குனியாமல் வந்தார். . அவுரங்கசீபு மகிழ்ந்து துலுக்கனாய்ப் போனால் சம்பாஜியை விடுவிப்பதாகக் கூறினார். அவுரங்கசீபு தன் மகளைத் தந்து மணம் செய்விப்பின், சம்பாஜி முகமதியனாக மாறுவதாகக் கூறினார். அவுரங்கசீபுக்குச் சினம் மிகுவதாயிற்று. சம்பாஜியைக் கொன்று விடுமாறு ஆணையிட்டார். சகம் 1617இல் சம்பாஜி கொல்லப்பட்டார்.

இதனை அவுரங்கசீபின் பெண் கேள்விப்பட்டுச் சம்பாஜியின் வீரத்தைப் போற்றித் தான் சம்பாஜிக்கே மனைவி என்று கூறி அதற்கேற்பத் தாச்சினா பொடியைத் தன் பல்லில் போட்டுக் கொண்டாள். அவுரங்கசீபு வருந்தி அவள் மனத்துக்கேற்ற முறையில்அவளுக்கு இன்பம் தர வேண்டுமென்று நினைத்துச் சம்பாஜியின் வழியினர் யாரேனும் உளரோ என்று அறிந்துவரச் சொன்னார். சம்பாஜிக்கு ஷாஹு என்ற மகன், சகம் 1614இல் பிறந்தாரென்று அறிந்து அவரை டில்லி பாதுஷாவிடம் கொணர்ந்தனர். அப்பிள்ளையை அவுரங்க சீபு தன் மகளிடம் அளித்தார். அவருக்குப் பன்னிரண்டு வயதாகிற போழ்து சக்வார் பாயியை மணம் செய்வித்தனர். அவுரங்கசீபுவிடம் பிள்ளையையும் பெண்ணையும் காண்பிக்க அனுப்புங்கால் சக்வார்பாயியை அனுப்பாமல் வீரு என்ற வேறொரு பெண்ணையனுப்பினர்.அவுரங்கசீபு மகிழ்ந்து ஷாஹுவுக்குரிய அரசச்செல்வமெல்லாம் வீருவுக்கு அளித்தார். பாட்சாவுடைய பெண் பரிந்து உரைத்தமையால் தன் வருமானத்தில் நாலத்தொன்று ஷாஹாவுக்கு அளித்துப் புனாதேயத்துக் கனுப்பினார். ஷாஹாவும் சகம் 1627இல் சாத்தாராவில் அரசு கட்டிலேறினார்; தம் தாயத்தாருள் ரகோஜி யென்பவரை வளர்ப்புப் பிள்ளையாக ஏற்றார்; ஒரு நாள் ஒரு குழந்தையைக் கண்டு அவற்குப் பத்தே சிங்கு என்று பெயரிட்டு வளர்த்து அக்கல்கோட்டையை அளித்தார்; ரகோஜியை லீருவுக்குப் பிள்ளையாக்கினார். மாலோஜியின் தம்பி விட்டோஜி ராஜாவின் வழியில் வந்த ராமராஜாவை வளர்த்தார். (அட்டவணை II பார்க்க)

ஷாஹு இறந்த பிறகு சகம் 1647இல் ராமராஜா அரசர் ஆனார். இவருக்குப் பின் சகம் 1694இல் கேலோஜியின் பேரன் ஷாஹா அரசரானார்."

சிவாஜியின் இரண்டாவது மகன் ராஜாராம். அவருக்குப் பனால தேயம் அளிக்கப்பட்டிருந்தது. அவருக்குப் பிறகு அவர் மகன் சம்பாஜி ஆட்சி