பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

172

தஞ்சை மராட்டிய


செய்தார். அவருக்குப் பிறகு அவர் தாயத்தாரில் ஒருவராகிய சிவாஜியென்பவர் அரசரானார்.[1]

10 தஞ்சாவூரை வென்ற ஏகோஜியை நான்காம் ஏகோஜி என்னலாம். சகம் 1596இல் மூன்றாவது சரபோஜி ராஜா திருமழபாடியில் பிறந்தார். நாயக்கர்களிடமிருந்து பேஷ்கள் பணம் வரவில்லை. தஞ்சையிலுள்ள நாயக்கர்கள் கோட்டை வெளியிலே தங்கியிருந்த இரண்டு முஸ்லிம் பிரபுக்களையும் ஏமாற்றத் திட்டமிட்டனர். பாதுஷாவிடம் சென்று வந்த வக்கீல் இச் செய்திகளை அவ்விரண்டு பிரபுக்களிடம் கூறித் தஞ்சை அரசை அவர்களே ஏற்று நடத்தலாம் என்றார். அப்பிரபுக்கள், நிலைமையை நன்கு அறிந்தவராய், ஏகோஜியிடம் சென்று கூற, ஏகோஜி சகம் 1596இல் மாசி மீ தஞ்சைக்கு வந்து இரண்டு பிரபுக்களையும் கலந்து கொண்டு, வடக்குவாயில் வழியாகத் தஞ்சைக் கோட்டைக்குள் புகுந்தார். சிறிது கலாம் நடந்த பிறகு கோட்டையைத் தன் வயமாக்கிக் கொண்டு கீழவாயில் வழியாக வெற்றியுடன் வெளிப் போந்தார். பின்னர்த் தன்னுடன் வந்த இரு பிரபுக்களிடமும் பெங்களுர்க்குத் தான் போவதற்கு விடை கேட்டார். அவ்விரு பிரபுக்களுக்குள் மனவேறுபாடு தோன்றினமை யின். ஏகோஜியையே தஞ்சையாட்சியை ஏற்குமாறு செய்தனர். பின்னர் ஏகோஜி அவ்விருவரையும் பீஜப்பூருக்கு அனுப்பி வைத்தார். அல்லியேதில் ஷாவும் மிக்க மகிழ்ச்சியடைந்து தஞ்சாவூர் அரசை வழிவழி ஆட்சி செய்யும் உரிமையை ஏகோஜிக்கு அளித்தார்.

பின்னர்த் திருச்சி நாயக்கர்கள் ஏகோஜியுடன் போர்புரிந்து, தோல்வியுற்றுச் செந்தலைப் பகுதியை ஏகோஜிக்கு விட்டுக் கொடுத்தனர். சகம் 1598 இல் ஏகோஜிக்கு மூன்றாவது மகன் துக்கோஜி பிறந்தார். ஏகோஜியின் இரண்டாவது மனைவி அண்ணாபாயிக்கு ஒரு மகள் பிறந்தாள். இவர் சேர்த்து கொண்ட ஒன்பது மனைவியரிடத்தில் ஏழு பிள்ளைகள் பிறந்தனர்.

இவர் சகம் 1604இல் இறந்தார்.

ஏகோஜியின் மூத்த மகன் ஷாஜி II பட்டமேற்றார். இவரது 11 மனைவி சிம்மாபாயி. இவரால் சேர்த்துக் கொள்ளப்பட்ட மனைவியர் பலர். இவர் தன் தாய் தீபா பாயியின் மனத்துக்கேற்ப நடந்து கொண்டு அரசாட்சி நடத்தினார்.

இவர் காலத்தில் முல்லா என்பவருடைய கலாமும், சுலுபுகான் (ஜல் ஃபிகர்கான்) என்பவருடைய படையெடுப்பும் நிகழ்ந்தன.

இவருடைய இரண்டாவது தம்பி துக்கோஜிக்கு சகம் 1617இல் ஐந்தா வது ஏகோஜி பிறந்தார். இவ் ஏகோஜிக்குப் பாவா சாயபு என்றும் பேருண்டு.


  1. *இவ்விருவரும் தஞ்சை மராட்டியக் கல்வெட்டுக் காலத்தில் ஆட்சி செய்து கொண்டிருந்தனர்.