பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

176

தஞ்சை மராட்டிய


தோற்றார்கள். கி.பி. 1749இல் ஒரு உடன்படிக்கையின்படி தீவுக்கோட்டை ஆங்கிலேயருக்குரியதாயிற்று.

அயிதராபாதில் இருந்த நிஜாம் உல்முல்க்என்பவர் தெற்குப் பகுதிகளில் நடந்த செய்திகளைக் கேள்விப்பட்டு, ஷாஹவினிடத்திருந்து பெரிய படைவுதவி பெற்றுக் கொண்டு திருச்சிக்கு வந்தார்; மொரார்ஜிகோர்படேயைத் திருச்சியினின்று வெளியேற்றித் தன்னுடன் வந்த அனவாருதீனிடம் திருச்சியை ஒப்படைத்துப்பின் அயிதராபாதுக்குத் திரும்பினார்.

அனவர்த்திகானின் மகன் மாஃபூசுகான் தஞ்சாவூர் அரசரைப் பேஷ்கள் செலுத்துமாறு பணித்தார். பிரதாபசிங்கர் பேஷ்கஷ் சிறிது தள்ளிக் கொடுக்க வேண்டும் என்று கேட்டரீர். மாஃபூசுகான் இதனைக் கேளாமல் தஞ்சையின் பேரில் படையெடுத்துத் தோற்றோடித் தன் தகப்பனிடம் நடந்ததைத் கூறினார்.

தன் மகன் பக்கம் தவறு இருந்த போதிலும், தன் சேனை தோல்வியுற்றது என்ற பேச்சுக்கிடமிருக்கலாகாதென்று நினைத்த அனவர்த்திகான் தஞ்சாவூர் பேரில் படையெடுத்தார். அனவர்த்திகான் படைகள் தோற்றன. அரசரும் அணவர்த்திகானை விட்டுவிடச் சொன்னார். அனவர்த்திகானும் ஆற்காட்டுக்குத் திரும்பினார்.

இப்படியிருக்கையில் சந்தாசாயபு சாதாராவில் சிறையினின்று விடுவிக்கப்பட்டார்; தஞ்சாவூர்ப் பக்கம் போகக் கூடாது என்று சந்தாசாயபுவிடம் சொல்லப்பட்டது. சந்தா சாயபு ஆதோணியிலிருந்த இராசத் மொஹி இன்கான் என்பவருடன் தெற்கே போந்து, பிரஞ்சுக்காரர் உதவியும் பெற்றுக் கொண்டு, ஆற்காட்டுக்குச் சென்று அனவர்த்திகானைக் கொன்றார்.

உடனே அனவர்த்திகானின் மகன் முகம்மது அலி நாகப்பட்டினத்துக்குச் சென்றார்; பிரதாபசிங்கருக்குக் கடிதம் எழுதினார்; பிரதாபசிங்கரது உதவியைப் பெற்றார்; திருச்சிக்குச் சென்றார்.

இந்நாளில் பிரதாப சிங்கர் மகன் துளஜாவுக்கு ராஜஸ்பாயி கல்யாணம் செய்விக்கப் பெற்றார். பிரதாபசிங்கரது முதல் மனைவி அஹல்யாபாயி இறந்தார். நான்காவது மனைவி எசவந்த பாயிக்கு இரண்டு பெண்கள் பிறந்தனர். பிரதாப சிம்மரின் வைப்பு மனைவியருள் அன்னபூரணாபாயி என்பவருக்கு இரண்டு பிள்ளைகள் பிறந்தனர். ஒருவர் இராமசாமி, இவரே பின்னாளில் அமர்சிங்கு எனப்பெற்றார். இன்னொருவர் கிருஷ்ணசாமி, இவர் சின்னாட்களில் இறந்து போனார்.

இராசத் மோதின்கான் சந்தாசாயபுவோடு திருச்சி நோக்கிப் படை யெடுத்தார்; வழியில் தஞ்சையரசரிடம் சிறிது பணம் கேட்டார். அரசர் கொடுக்கவில்லை. ஆகவே அவ்விருவரும் தஞ்சையை முற்றுகையிட்டனர். ஏறத்தாழ 2,மாதம் போர் நடந்தது. இதற்குள்ளாக ஐதராபாதிலிருந்து நாகர்