பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மன்னர் வரலாறு

179


இராமநாதபுரத்தரசருக்கும் தஞ்சை அரசருக்கும் மனவேற்றுமை ஏற்பட்டது. துளஜா இராமநாதபுரத்தின் மேல் படையெடுத்தார். இறுதியில் போர்க்குரிய செலவு பெற்றுத் திரும்பினார்.

நவாபுக்குச் செலுத்த வேண்டிய தொகை நின்றுவிட்டது. முகம்மதுஅலி தஞ்சையைத் தனக்குரியதாக்கிக் கொள்ள வேண்டும் என்று நினைத்துத் தோஃபா கேட்டனுப்பினார். துளஜா செலுத்தவில்லை. ஆகவே தன் மூத்த மகன் உமதத்துல் உமரா என்பவருடன் பெரிய படையையனுப்பினார். துளஜா உடன்படிக்கை செய்து கொண்டார். அதன்படி பாளையத்துச் செலவுக்கு 50 லக்ஷம் கொடுத்தார். பாதிச் சீமையை அடமானமும் வைத்தார்; மேலும் இளங்காடு சீமையை நவாபுக்குக் கொடுத்து விட்டார்.

பின்னர் முகமது அலி தன் இரண்டாவது மகன் மதார்முலுக் என்பவரைத் தஞ்சாவூர் பேரிலே அனுப்பினார். அவர் தஞ்சாவூர்க் கோட்டையைப் பிடித்து, டபீர் நாரோ பண்டிதரை ஆட்சியில் நியமித்துக் கோட்டையில் தன் சேனைகளை வைத்துத் திரும்பினார். (தஞ்சாவூரில் நவாபின் ஆட்சி 17-9-1773 முதல் 11-4-1776 வரை நடந்தது).

கிலிபிலி அண்ணா என்று ஒருவர்; லிங்கோஜி என்றும் இவர்க்குப் பேருண்டு. இவர் மந்திரியாக இருந்தபொழுது கோனேரி ராவ் என்கிற தேசஸ்தர், சமேதார், ஆரணியினின்று வந்தார். அவருக்குச் சம்பளம் கொடுபடாமலிருந்தது. அதனால் மறியலாக வந்து உட்கார்ந்தார். அமைச்சருக்குக் கோபம் வந்தது. இதையறிந்த ஒருவன் கோனேரிராயரை இழித்துப் பேசி னான். இதனால் இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டது. கோனேரிராயரைப் பிரியில் பிணித்துப்பறையரைக் கொண்டு தெருவில் இழுப்பித்தார்கள். அந்தப் பிராமணன் இறந்தார்.

இது போன்ற செயல்களால் ஏற்பட்ட பாவம்தான் அரசர் தோற்றதற்குக் காரணம் என்று பலரும் எண்ணினார்.

நவாபு கோட்டையைப் பிடித்துக்கொண்ட செய்தி சீமைக்குத் தெரிந்தது. சீமையிலிருந்த மேலாளர்கள் நவாபின் செயலுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை. லார்டு பிகட்டு என்பவரைச் சென்னைக்கு அனுப்பித் துளஜாவுக்கு அரசை மீண்டும் அளிக்கச் செய்யுமாறு பணித்தனர். லார்டு பிகட்டு தஞ்சைக்கு வந்து கோட்டையையும் சீர்மையையும் துளஜாவுக்கு ஒப்புவித்துப் பட்டமும் கட்டினார்.

இந்த உதவிக்குத் துளஜா மகிழ்ந்து தஞ்சாவூர்க் கோட்டையினுடைய கில்லேதார் பவுஜ்தார் பதவிகளை ஆங்கிலேயருக்கு அளித்தார்: மேலும் இனாம் லக்ஷம் பொன்னும், நாகூரும் அதனை அடுத்துள்ள 277 ஊர்களும் அளித்தார். பின்னர் நவாபுக்குப் பேஷ்கள் கொடுக்கவில்லை.

துளஜாவின் மூன்றாவது மனைவி மோகனாபாயி ஒரு குழந்தையை ஈன்று தானும் இறந்தாள். தனக்கு ஆண் குழந்தைகள் இல்லாமையால் சுலக்ஷ்ண