பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

180

தஞ்சை மராட்டிய


பாயி, மோகனாபாயி என்ற இருவரைத் துளஜா திருமணம் செய்து கொண்டார். மோகனாபாயி வயிற்றில் ஒரு குழந்தை பிறந்து இறந்தது. பின்னர் ஒரு ஆண் குழந்தை பிறக்க அக் குழந்தைக்கு அப்துல் பிரதாபராம் என்று பெயர் சூட்டினர். இவரும் ஆறாண்டுகள் வளர்ந்து வைசூரியால் இறந்தார். துளஜாவுாகுத் தன் பெண் வழி ஒரு பெயரன்; மாருதி சாமி என்று பேர்; ஒரு பெயர்த்தி சாந்தம்மாள். இவ்விரு குழந்தைகள் பிறந்த பிறகு துளஜாவின் மகள் அபருப பாயி இறந்தாள், பின்னர் அக்குழந்தைகளும் இறந்தன. இதனால் துளஜா நோய்வாய்ப் படலானார்.

இந்நாளில் அயிதர்அலி தஞ்சைமேல் படையெடுத்தார். பெரிய பஞ்சமும் ஏற்பட்டது. பலரும் இறந்தனர்.

துளஜாவின் இறுதிக் காலத்தில், தன் மக்கள் பேரப்பிள்ளைகள் யாவரும் இறந்துபட்டமையால், தனக்கு நீர்க்கடன் செலுத்தவும் தனக்குப்பின் அரசாள் வதற்கும் தன் தாயத்தாரில் ஒருவரைச் சுவீகாரம் எடுத்துக் கொண்டு. சரபோஜி என்று பெயரும் வைத்தார். இச்சரபோஜி விட்டோஜி ராஜாவின் வழியில் வந்தவர். அரசர் சரபோஜியை, ரிசிடெண்டு ஹட்லிஸ்டன், கர்னல் ஸ்டூவர்டு. பாதிரி ஸ்வார்வு ஆகியோரிடம் ஒப்படைத்தார்.

பின்னர்ச் சரபோஜியை அரியணையில் வீற்றிருக்கச் செய்து, எல்லாரையும் சரபோஜிக்கு மரியாதைகள் செய்யச் செய்து, சென்னைக்கும் எழுதியனுப்பினார்.

இதனையறிந்த சிலர், துளஜாவின் தம்பி அமர்சிங்குக்குப் பட்டம் தர வேண்டும் என்று நினைந்து, அவரை வரச் செய்து, துளஜாவின் ஆணையென்று கூறித் துளஜாவின் மடியில் அமர்சிங்கை இருக்கச் செய்து, இச்செய்தியைச் சென்னைக்கும் எழுதியனுப்பி வைத்தார்கள்.

மறுநாள் (சகம் 1708இல்) துளஜா இறந்துவிட்டார். சரபோஜியை அரு கில் வைத்துக்கொண்டு அமர்சிங்கு துளஜாவின் இறுதிக்கடன்களை நடத்தி னார். பின்னர்க் கவர்னர் கேமலைக் கொண்டு வங்காளத்துக்கு எழுதவேண்டிய முறைப்படி எழுதினார். கேமலும் தஞ்சைக்கு வந்து, நடுவுநிலையாளர் எனப் பட்ட பன்னிருவரை விசாரித்து, அவர்கள் கூறியவண்ணம் அமர்சிங்கே ஆட்சிக் குரியரென்று வெளிப்படுத்திச் சகம் 1709இல் அமர்சிங்கை அரசராக்கினர்.

துளஜாமகாராஜா சுவீகாரம் எடுத்துக் கொண்டிருந்தபோதிலும் 15 அமர்சிங்கு சரபோஜியைத் துன்புறுத்தி வந்தார். சரபோஜியினிடத்தில் ஸ்வார்ஷ்பாதிரியாருக்கு அன்பு இருந்தது. ஸ்வார்ஸ் எல்லாச் செய்திகளையும் கும்பினியாருக்கு அவ்வப்பொழுது தெரியப்படுத்தி வந்தார். இந்நாளில் ராம் என்பவர் ரெசிடெண்டாக வந்தார். அவ்வமயம் அமர்சிங்கு மேற்பார்வையினின்று சரபோஜியை மீட்டு. அவருக்கும் அவரது தாய்மார்களுக் கும் வேண்டிய செலவுகளுக்கு ஏற்பாடு செய்யப்பெற்றது. சரபோஜியும் ஆங்கில மும் பிறவற்றையும் நன்கு படித்தார். சுலசுனாபாயி இறந்தார்; அவரது இறுதிக்கடன்களும் நிறைவேறின. பின்னர்ச் சரபோஜியும் அவருடைய எஞ்சிய