பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



அடிப்படைச்சுவடிகள் - நூல்கள்

(1) போன்ஸ்லே வம்ச சரித்திரம்

இது மராத்தி மொழியில் அமைந்த பெரிய கல்வெட்டாகும். தஞ்சைப் பெரிய கோயிலின் திருச்சுற்று உட்புறத்தில் தென்மேற்கு மூலையில். இந்நாளில் தேர்க்கொட்டகை உள்ள இடத்துக்குப் பின்புறத்திலும் இடதுபக்கத்திலும் உள்ள சுவரில் இந்தப் பெரிய கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது.

மராட்டிய மாநிலத்துத் துலியா (Dhulia) என்ற ஊரில் இறுதிக்காலத்தில் இருந்த திரு. வி. கே . ராஜ்வாடே[1]

(Vishwanath Kashinath Rajwade) என்பவரால் "பிரபாத்' (Prabhat) என்ற இதழில் இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்தக் கல்வெட்டுப் பதிப்பிக்கப்பட்டது. பின் சகம் 1828 இல் (கி. பி. 1906) நூல்வடிவில் "சத்கார்யோத்தேஜக சபையில்" வெளியிடப்பட்டது.[2]

தஞ்சாவூரில் இருந்த உயர்நீதி மன்ற வழக்கறிஞர் திரு. சாம்பமூர்த்திராவ் என்பவர் 1906-07இல் மிகுந்த முயற்சி எடுத்துக்கொண்டு படியெடுத்து இம் மராத்திக் கல்வெட்டை 1907இல் அச்சிட்டு வெளியிட்டார். இவர் 1900 முதற் கொண்டு 1906 வரை இரண்டு உதவியாளர்களைக் கொண்டு இக்கல்வெட்டைப் படியெடுத்தார். முதலில் உதவியாளர்கள் படியெடுப்பர்; அதை இவர் ஒப்பீடு செய்து பார்ப்பார். பாதி வேலை முடிந்த சமயத்தில் திருவருட் கொடையாக இவருக்கு இக்கல்வெட்டுக்குரிய கையெழுத்துப் பிரதியொன்று அரண்மனையினின்று கிடைத்தது. காமாட்சி யம்பாபாயி சாகேபு[3]

அவர்களுடைய அலுவலர் நாகராச பண்டிதர் என்றொருவரிருந்தார். அவருடைய பிள்ளைகள் அந்த அரசியாரின் அலமாரியினின்று ஒரு கையெழுத்துப்படியைக் கொணர்ந்து கொடுத்தனர். இச்சுவடி பெறுவதற்குள் பாதிப்பகுதி படியெடுக்கப்பட்டிருந்தது.[4]

இது கி.பி. 1905இல் நிகழ்ந்தது. இந்தச் சுவடியை வைத்துக்கொண்டு ஒப்பீடு செய்து அச்சுக்கு ஏற்ற வகையில் சுவடி தயாரிக்கப்பட்டு அச்சிடப் பெற்றது அரண்மனையினின்று கொணர்ந்த சுவடி திருப்பித் தரப்பட்டுவிட்டது. இங்ஙனம் மராத்திக் கல்வெட்டை அச்சிட்ட திரு. சாம்பமூர்த்திராவ் அவர்கள்


  1. 1. இவர் வரலாறு ஜாதுநாத் சர்க்கார் என்பவர் எழுதிய House of Shivaji என்ற நூலில் பக்கம் 247 முதல் 281 வரை காணலாம்.
  2. 2. போ. வ. ச. மராட்டியப் பகுதிக்கு முன்னுரையாக மேஜர் என். பி. கத்ரே எழுதியது.
  3. 3. இவர் 1832-1855 வரை தஞ்சையரசராக இருந்த சிவாஜியின் இரண்டாவது மனைவியாவர்.
  4. 4. அச்சுவடி இப்பொழுது இருப்பதாகத் தெரியவில்லை.