பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

184

தஞ்சை மராட்டிய


மெக்கன்சி சேகரித்த சுவடிகள் சென்னையில் இருத்தலைக் கேள்விப்பட்டிருந்தார் எனினும் அவற்றைப் பார்த்தவர் அல்லர்.[1] எனினும் தஞ்சை மராத்தியக் கல்வெட்டை இந்த நூற்றாண்டின் தொடக்கத்திலேயே (1906) இலேயே தஞ்சையில் பதிப்பித்த பெருமை திரு. சாம்பமூர்த்தி ராவ் அவர்களையே சாரும்.

இம்மராத்தியக் கல்வெட்டு கி. பி. 1951இல் தமிழ் மொழி பெயர்ப்புடனும் ஆங்கிலச் சுருக்கத்தோடும் தஞ்சைச் சரசுவதி மகால் வெளியீடாக வந்து, 1980 இல் மறுபதிப்பும் எய்தியது. தமிழ் மொழி பெயர்ப்பை மராத்திக் கல்வெட்டுக்கேற்ப அமைத்துதவியவர் சரசுவதி மகால் நூல் நிலையக் காப்பாளராக இருந்த திரு. வி. சீனிவாசாச்சாரியா ரவர்களாவர். இப்பணியில் இவர்க்கு உதவி புரிந்தவர் திரு. சிவாஜி காட்டிகே என்பவர் ஆவர்.[2]

போன்ஸ்லே வம்ச சரித்திரமாகிய மராத்திக்கல்வெட்டின் காலம் "சகம் 1725 ருதிரோத்காரி வருஷம் மார்க்க சீர்ஷ மாதம் கிருஷ்ண பக்ஷம் அமாவாசைக்குச் சரியான கி. பி. 1803 டிசம்பர் 13.உ என்பதாகத் தமிழ் மொழி பெயர்ப்பில் உள்ளது. இதனை எழுதியவர் 1798-இல் தஞ்சை ஆட்சி யெய்திய சரபோஜி மன்னரின் சிட்னிஸ் பாபுறாவ்[3] என்பவர் ஆவர்.

இக்கல்வெட்டின் தமிழாக்கத்துடன் மெக்கன்சி சுவடிகளை ஒப்பீடு செய்வது இன்றியமையாத செயலாகும். மராட்டியக் கல்வெட்டில் ஒரு பெரிய பிழை நேரிட்டு விட்டது. எப்படி ஏற்பட்டது என்று அறிவதற்கு வாய்ப்பில்லை எனினும் இந் நூற்றாண்டில் தமிழாக்கம் செய்தவர் அப்பிழையை எடுத்துக் காட்டியுள்ளார்.[4] மெக்கன்சி சுவடிகள் டி 3762, டி. 3180, டி 3119 ஆகியவற்றோடு தமிழாக்கத்தை ஒப்பு நோக்கிப் பார்ப்பின் அப்பிழை எங்ஙணம் நேரிட்டது என்பதை ஒராற்றான் ஊகித்தறியக்கூடும்.

இக்கல்வெட்டுக்குரிய வாசகம் முதலில் தமிழில் எழுதியிருத்தல்கூடும். அதனை மராத்தியில் பெயர்த்தெழுதியவர்.

"1629 பிரமோதுரத வருஷத்தில் பிரசவித்துப் புத்திர பாக்கியத்தை பெற்றார்" பிழை காட்டு: Closing </ref> missing for <ref> tag


  1. 5. Evidence of T. Sambamurti Rao, in the Court of the Sub-ordinate Judge. Tanjore, the first day of December 1916, in O.S. No. 26 of 1912; No. 117 Pages 573-577 of the depositions
  2. 6. சரசுவதி மகால் நூல் நிலைய வெளியீடு எண் 46 - போன்ஸ்லே வம்ச சரித்திரம், இரண் டாவது பதிப்பு, 1980, நூன்முகம், பக்கம் 2.
  3. 7. மேற்படி பக்கம் 1.30: தமிழ் மொழி பெயர்ப்பில் சகம் 1759 என்று பிழையாக அச்சிடப் பெற்றுள்ளது. இதே பதிப்பில் மராட்டியப்பகுதி பக்கம் 10 1-இல் 1725 என்றிருத்தலைக் காணலாம்.
  4. 8. போ. வ. ச. பக்கம். 17 அடிக்குறிப்பு.