பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மன்னர் வரலாறு

185

என்ற அளவில் மொழி பெயர்த்த பின்னர்ச் சிறிது கால இடைவெளி ஏற்பட்டிருக்கக் கூடும். பின்னர் மொழி பெயர்க்கத் தொடங்கினார். ஒரிருபக்கங்கள் தள்ளி மேலே கண்டவாறு,

"புத்திரபாக்கியத்தைப் பெற்றார்"

என்ற பகுதியைக்கண்டு அங்கிருந்து மராத்தியில் பெயர்த்தார் என்று கருதலாம். ஆகவே இத்தவறு நிகழ்ந்தது போலும்.

யாதவராஜாவைத் தன்னை வந்து காணுமாறு சொல்லியதாக (பக்கம் 16, இறுதிவரியில்) கூறியதற்குப் பிறகு, "யாதவராஜா தெய்வகதியடைந்து விட்டதையும்" ஒன்று (பக்கம் 17-இல்) கூறியிருப்பது. இடையில், யாதவ ராஜா வருகை, அவர் தெய்வகதியானமை முதலிய சில செய்திகள் விடுபட்டிருத்தலைக் காட்டும்.

இந்த இடத்தில் மெக்கன்சி சுவடிகள் மூன்றும், சகம் 1551 இல் ஜிஜா பாய் மகப்பேறடைந்தமையும், அவ்வாண்மகற்குச் சிவாஜியென்று பேர் வைத்தமையும், பத்தேகான் சூழ்ச்சியும், அதற்கேற்ப யாதவராசா கொலை செய்யப்பட்டமையும், இதனை ஷாஜியறிந்து சாத்தாராவுக்குச் சென்றமையும், ஒரு பஞ்சம் நிகழ்ந்தமையும், சாத்தாராவில் ஷாஜியிருக்குங்கால் துக்காபாயிக்கு ஆண்குழந்தை பிறந்தமையும், அதற்கு ஏகோஜி என்று பெயர் சூட்டியமையும் சொல்லப்பட்டுள்ளன.

மெக்கன்சி சுவடியை இந்தப் பகுதியில் படித்தால் கல்வெட்டிலும் கல்வெட்டின் தமிழாக்கத்திலும் தவறுநேர்ந்த விதம் ஒருவாறு ஊகித்தறியலாம்.

மெக்கன்சி சுவடிகளில் இல்லாத சில செய்திகள் போன்ஸ்லே வமிச சரித்திரத்தில் காணப்படுகின்றன. அவை பின்வருமாறு:

1. ஏகசிவராசா யென்றொருவர் (கால்வழி முறை அட்டவணை I காண்க) மகாசேனர் என்பவருடைய மகனாவர். இவ்வேகசிவராசா சில விருதுகளை ஈட்டினார். தம்மிடம் வேலையில் அமர்ந்த பேஷ்வா, ஸர்நோபத் போவார் முதலிய அலுவலர்களுக்குப் பகிர்ந்தளித்தார்; தாமே சில விருதுகளை ஏற்படுத்திக் கொண்டார்; பல்லக்கு அலங்காரம் - ஆகியவை கூறப்பட்டுள்ளன." [1]

2. அவுரங்கசீபின் குதிரை தண்ணீர் குடிக்கச் சென்று அஞ்சிக் கரைக்கு ஒடி வர, அவுரங்கசீபு "சிவாஜி வந்துளான்" என்று அஞ்சுகிறாயா என்றமை.[2]

3. பிரதாப சிம்மர் தன் படைத்தலைவர் மானாசிராயரை இராமநாத புரத்தின் மேல் படையெடுத்துச் செல்லுமாறு செய்தது.[3]


  1. 10. போ. வ. ச. பக்கம் 2-4
  2. 11. போ. வ. ச. பக்கம் 60
  3. 13. போ. வ. ச பக்கம் 109-110

69–24