பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மன்னர் வரலாறு

187


குறிப்பிடத்தக்க செய்திகள்

சுவடிகளிலும் கல்வெட்டிலும் சில சிறப்புச் செய்திகள் காணப்படுகின்றன.

1. ஜிஜாபாய் ஷாஜியின் இரண்டாவது மனைவியென்பது

ஷாஜியின் மனைவியர் இருவருள் ஜிஜாபாய் இரண்டாவது மனைவி யென்று சுவடிகளிலும் கல்வெட்டிலும் கூறியிருக்க, வரலாற்றாசிரியர்கள் ஜிஜாபாயியை ஷாஜியின் முதன் மனைவியென்றும், ஷாஜி அவரிடம் விருப்பம் குறைந்து துக்காபாயியை (ஏகோஜியின் தாயை) இரண்டாவது மனைவியாக ஏற்றுக்கொண்டார் என்றும் கூறுவர்.[1]

“The first wife was Jijäi Āti and the second wife Tukai Åu”

என்று கிருஷ்ணாஜி அனந்த் சபாசத்'[2]அதன் நூலில் கூறியுள்ளமை எளிதில் புறக் கணித்தற்கியலாததாகும். எனினும் கல்வெட்டும் சுவடிகளும் ஜிஜாபாயியை ஷாஜியின் இரண்டாவது மனைவியென்றே கூறுவதைப் பின்வரும் கூற்றுக்களால் அறியப்பெறும்.

(அ) மோஹிதே ராஜா என்பவருடைய கன்னிகையான உமாபாயி சாகிபாவை (துக்காபாயியை) முதன்முதலாக விவாகம் செய்து கொண்டார் ... பிறகு யாதவராசா என்கிற அரசர் பிரார்த்தனை செய்து தன்னுடைய கன்னிகை யான ஜிஜாவூவை ஷாஜி ராஜாவுக்கு இரண்டாவது மனைவியாக விவாகம் செய்து கொடுத்தார்.[3]


  1. 18. “(A. D. 1604) The marriage of Shahjee to Jeejee Bye was celebrated with great pomp" - (Duff, page 61) “Shahjee, in the year 1630, married into another family which was resented by Jeejee Bye his first wife and she retired to some of her own relation” — (Duff, page 61) “The marriage of Shahji and Jijabai in 1604 was celebrated with great ceremonial and was honoured by the presence of the king in person” — (Kıncaid & Parasnis, Page 116). m “In 1630 Shahji had contracted a second marriage with Tuka Bai, a girl of the Mohite family ... and after his second marriage, Jijabai seems to have broken off all but formal relation with her husband – (Kincaid and Parasnis, P. 124). . “Shaji later took a second wife from the Mohite family of Supa and Jija Bai came to be practically neglected by her husband” – (Sardesai, Page 53)
  2. 18. அ. Sen page 2–3
  3. 19. போ. வ. ச. பக். 3 (இந்நூல் பக்கம் 11)