பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மன்னர் வரலாறு

189


லகோஜி ஜாதவரால் என்பவர் தேவகிரி யாதவ் அரசமரபைச் சேர்ந்தவர். இவர் சிந்த்கெட் பகுதிக்குத் 'தேஷ்முக'[1] ஆக இருந்தார். இவர் அகமது நகரில் 10,000 குதிரைகள் கொண்ட படைக்குத் தலைவராக இருந்தார். ஷாஜியின் தந்தையாகிய மாலோஜியும் மாலோஜியின் தம்பி விட்டோஜியும் இந்த ஜாதவ் ராவ் ஆதரவில் இருந்தனர்.

கி. பி. 1599-இல் ஹோலிப்பண்டிகை நடந்த சமயத்தில் மனோஜி தன் மகன் ஷாஜியுடன் யாதவராஜாவின் வீட்டுக்குச் சென்றார். யாதவராஜாவுக்கு ஒரு மகள் இருந்தனள்; ஜிஜாபாய் என்று பேர். யாதவராஜா ஷாஜியை அழைத்து' ஜிஜாபாயியின் அருகில் அமர்த்தி "இருவரும் தகுந்த இணையாக உள்ளனர் என்றார். இரு குழந்தைகளும் ஒருவர் மேலொருவர் சந்தனப் பொடியைத் துவி விளையாடினர். யாதவராஜா "இருவரும் தகுந்த இணை" என்று கூறியதைக்கேட்ட மானோஜி, யாதவராஜா என்னுடன் சம்பந்தம் செய்ய உடன்பட்டிருக்கிறார்" என்று கூறினார். இதனையறிந்த யாதவராஜாவின் மனைவி இதற்கு உடன்படவில்லை. மறுநாள் யாதவராஜா மானோஜியை விருந்துக்கு அழைத்தபொழுது "ஷாஜியை மருமகனாக ஏற்றுக் கொண்டாலன்றி விருந்துக்கு வரவியலாது" என்று கூறினார். இதனால் இருவருக்கும் மனவேற்றுமை ஏற்பட்டது.இதனையறிந்த நிஜாம்ஷா மாலோஜியை 5,000 குதிரைகட்குத் தலைவனாக்கினார்; பூனா சூபா ஆகியவற்றைச் சாகீராகக் கொடுத்து "ராஜா' என்ற பட்டமும் அளித்துப் பெருமைப்படுத்தினார். இதனால் யாதவராஜாவுக்குத் தன்மகளை ஷாஜிக்கு அளிக்கத் தடை ஏதும் இல்லையாயிற்று. 1604இல் இருவருக்கும் திருமணம் நடந்தது.[2] - இச்செய்திகள் போ. வ. ச. விலோ அல்லது மெக்கன்சி சுவடிகளிலோ குறிக்கப் பெறவில்லை.

இங்ஙனம் குறிக்கப்படாமைக்குரிய காரணம் வெளிப்படை. இச்செய்தி மாலோஜியின் குலப்பெருமையைப் பாதிப்பதாக உள்ளது. ஜாதவரால் முதலில் திருமணத்துக்கு இணங்காமைக்குரிய காரணம் அவரிடம் மாளோஜி வேலையிலிருந்தமையேயாகும். இரண்டாவது, சுவடி கல்வெட்டு எழுதியோர் கருத்து ஜிஜாயியை ஷாஜியின் இரண்டாவது மனைவி என்று வற்புறுத்திக் கூறுவதே யாகும். மேற்கண்ட கதை இவர்கள் கருத்துக்கு மாறுபட்டது. ஆகவே இக்கதையை இவர்கள் அறவே குறிக்காது விட்டனர் என்னலாம்.

ஜிஜாபாயியின் திருமணம் மாளோஜி உயிருடன் இருந்தபொழுதே நிகழ்ந்ததாக மேற்கண்ட செய்தியினின்று தெரிந்திருக்க, போ.வ.ச. மாளோஜி இறந்த பிறகு திருமணம் நடந்தது என்று கூறும்.[3] சிவபாரத சரித்திரத்திலும்


  1. 264. Deshmukh - A hereditary officer, the head of a district (Takakhaw Index)
  2. 27. டஃப் (பக்கம் 44-45); கி.பா. (பக்கம் 114-128); 12,000 குதிரைகட்குத் தலைவனாக்கினார் என்றும். 1804 ஏப்பிரல் திங்களில் திருமணம் நடந்தது என்றும் தகாகாவ் (பக்கம் 13-14) கூறுவர்.
  3. 19. போ. வ. ச. பக்கம் 8