பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

190

தஞ்சை மராட்டிய

மாளோஜி இறந்த பிறகே விட்டோஜியின் ஆதரவில் வளர்ந்த பொழுது ஜிஜாபாயியைக் கல்யாணம் செய்வித்ததாகக் கூறப்பட்டுள்ளது.[1] ஏகோஜியைத் திருவயிறு வாய்த்த துக்காபாய் திருமணச் செய்தி சிவபாரதத்திலே இல்லை.

ஆனால் ஜாதுநாத் சர்க்கார் தன் Shivaji and his timesஎன்ற நூலில் பக்கம் 19இல் பின்வருமாறு கூறுவது கவனிக்கற்பாலது. "In reality they (Jija Bai and Shivaji) seem to have both fallen under his neglect. It is a fair. inference from the known facts that by the year 1630 or there about Jija Bai lost her husband's love, probably with the loss of her youth, and Shahji. forsook her and her little son Shivaji and took a younger and a more beautiful wife”.

2. ஷாஜீக்கும். யாதவ ராஜாவுக்கும் ஏற்பட்ட பகைமைக்குக் காரணம்

ஷாஜியின் மனைவி ஜிஜாபாய்; ஜிஜாபாயின் தந்தை யாதவராஜா. இவ் விருவருக்கும் பகைமையேற்பட்டமைக்குரிய காரணம் போ. வ. ச. விலும் (சுவடிகளிலும்) சிவபாரத சரித்திரத்திலும் ஒரே மாதிரியாகக் கூறப்பட்டுள்ளன.[2] சுருக்கம் பின்வருமாறு:

ஒருநாள் நிஜாம்ஷா அரியணையில் அமர்ந்து சதிர் பண்ணினார். பல அரசர்களும் வந்து வணங்கினர். சதிர் கலைந்து போகும்போது கண்டாகலே என்கிறவர் தன் யானையை முன்னே போகவிட்டார். அவ்யானைக்கு மதம் வந்து எல்லாரையும் அடிக்கத் தலைப்பட்டது. யாதவ ராஜாவினுடைய மகன் தத்தவர்மா என்கிறவர் யானையைத் துதிக்கையின் கண் வெட்டி வீழ்த்தினார். விட்டோஜி ராஜாவினுடைய மக்கள் சம்பாஜி கோலோஜி என்பவர்கள் கண்டா கலேக்கு உதவுவதற்கு முன்வந்தனர். தத்தவர்மா சம்பாஜியின்மேல் சண்டைக் குப் போனார். ஷாஜி, தன் தம்பிக்கு உதவச் சென்றார். நடந்த சண்டையில் தத்தவர்மா இறந்தார். யாதவராஜா தன் மகன் இறந்த வருத்தத்தால் சண்டை செய்ய வந்தார். ஷாஜி ராஜா எதிர்த்தார். யாதவராஜா கத்தியினால் வெட்டி னார்; வெட்டுப்பட்ட ஷாஜி மூர்ச்சையுற்று விழுந்தார். தன்மகனைக் கொன்ற சம்பாஜியையும் யாதவராஜா கொன்றார். இதனையறிந்த நிஜாம்ஷா இருவரை யும் சமாதானப்படுத்தி யனுப்பிவிட்டார். ஷாஜிக்கும் யாதவராஜாவுக்கும் மன வருத்தம் வந்தமைக்குரிய காரணம் இங்ங்ணமே போ. வ. ச. விலும் சொல்லப் பட்டுள்ளது. இச்செய்தியை வரலாற்றாசிரியர்கள் யாரும் குறிப்பிடவில்லை.

நிஜாம்ஷா முகலாயருக்குத் தோற்றார் என்றும், அப்பொழுது நிஜாம் ஷாவின் சேனைத்தலைவராக இருந்தவர் மாலிக் அம்பர் ஆவர் என்றும். இத்தோல்வி காரணமாகச் சேனைத் தலைவர்களில் ஒருவராகிய லக்கோஜி ஜாதல்


  1. 30. சிவபாரதம் பக்கம் 6
  2. 31. இந்நூல் பக்கம் 12-14; போ. வ. ச. பக்கம் 8-11; சிவபாரதம் பக்கம் 8-9