பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மன்னர் வரலாறு

191


ராவ் முகலாயர் பக்கம் சேர்ந்தார் என்றும், தன் மாமனார் சென்ற போதிலும் ஷாஜி முகலாயர் பக்கம் செல்லவில்லையென்றும், அதனால் இருவருக்கும் பகைமையுண்டாயிற்று என்றும் வரலாற்றாசிரியருள் ஒருவர் கருதுகிறார்.[1]

3. ஷாஜியின் முன்னோர்

ஷாஜியின் முன்னோர்கள் ஆகப் பன்னிரு தலைமுறையினரைப் போ. வ ச. வும் மெக்கன்சி சுவடிகளும் கூறுகின்றன. இம்மரபினரின் முதல்வர் சம்பு பருவதத்தில் எழுந்தருளியுள்ள ஶ்ரீ சாம்பசிவப்பெருமானிடத்தில் அன்பு பூண்டவர் என்று தொடங்கி சம்பு - ஏகோஜி - சரபராஜா - மகாசேனன் - ஏக சிவராஜா - ராமச்சந்திர ராஜா - பீமராஜா - இரண்டாவது ஏகோஜி - வராஹ ராஜா - மூன்றாவது ஏகோஜி - பிரும்மராஜா - முதல் ஷாஜி - அம்பாஜி - பரசோஜி - பாவாஜி - மாலோஜி - ஷாஜி என்று ஷாஜிக்கு முன் பதினைந்து பேர் சொல்லப்படுகின்றனர். இங்ஙணம் வேறு எந்த நூலிலும் கூறியிருப்பதாகத் தெரியவில்லை.

டஃப் தம்முடைய நூலில் (பக்கம் 43) வெரேல் (verole) என்னும் தவுல தாபாதுக்கு (Doulatabad) அருகில் உள்ள ஊரில் படேல் (Patel - ஊர்த்தலைவர்) ஆகப் போன்ஸ்லேக்கள் இருந்தனர் என்று கூறிப் பாப்ஜி (Babiee) போன்ஸ் லேக்கு இருவர் மக்கள்; மூத்தவர் மல்லோஜி; இளையவர் விட்டோஜி என்று இவ்வமிசத்தைப் பற்றிக் கூறினார்.

இன்லெயிடு - பாரஸ்நீஸ் தம் நூல் பக்கம் 112-114-ல் ஷாஜியின் முன் னோர்களில் ஒருவர் ஸஜன சிங்கு (Sajana Sing) என்பவர் ஆவர் என்றும், அவர்களுள் ஒருவர் தேவராஜ்ஜி ஆவர் என்றும், இத்தேவராஜ் உதையபூர் ராணாவிடம் சண்டையிட்டுத் தக்காணத்தக்குச் சென்றார் என்றும், அங்குப் போன்ஸ்லே என்று பெயர் பூண்டு கொண்டார் என்றும் கூறியதோடு, கேல் கர்னாஜி அல்லது கேலோஜியும் அவருடைய உடன் பிறந்தார் மால்கர்னாஜி அல்லது மாலோஜியும் உதயபுரி (Udaipnr) யினின்று அகமதுநகருக்கு வந்தனர் என்றும், கோலோஜி போரிலிறந்தார் என்றும், மால்கர்னாஜி ஒரு ஆற்றில் நீராடுங்கால் இறந்தார் என்றும், மால்கர்னாஜியின் மகன் பாபாஜி (Babaji) தவுலதாபாதுக்கு அருகிலுள்ள வெருல் (Werul) என்ற ஊரின் தலைமைப் பதவியை (Patilki or headship) விலைக்கு வாங்கினார் என்றும், பாபாஜிக்கு மாலோஜி விட்டோஜி என்ற இருமக்கள் என்றும், மாலோஜி, வனங்குபால் நிம்

  1. 32. “Shahaji greatly distinguished himself in the fighting against the Mughals. But in spite of his gallantry Malik Ambar was defeated. Lakhoji Jadav Rao and many other highly placed Maratha nobles deserted to Shah Jehan. Shahaji, however, remained faithful to Malik Ambar until the latter's death in 1626...” (Page 117): “Before his (Shivaji's) birth, his grandfather Lakhoji Jadhav Rao had joined the Mughals, and Shahaji by refusing to follow his example had incurred his bitter enmity” (Page 124) - (Kincaid & Parasnis)