பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மன்னர் வரலாறு

193


இறுதியில் கூறிய பாபாஜி கி.பி. 1533இல் பிறந்தவர். பாபாஜி இரு மக்கள் - மாலோஜி விட்டோஜி. மாலோஜி கி. பி. 1550இலும் விட்டோஜி 1553இலும் பிறந்தனர்.

இந்த வழிமுறை சிட்னிஸ் பக்கரில் (Chitnis Bakhar) உள்ளவாறு எழுதப் பட்டுள்ளது என்றும், சாதாராவின அரசர் பிரதாபசிங்கர் எழுதுவித்த கால் வழி முறை (Genealogy) யுடன் மேலே கூறிய வழிமுறை ஒத்து வருகிறது என்றும், மேற்கண்ட சாதாரா அரசர் அந்தக் கால்வழிமுறையை அச்சிட்டு வெளிட்டுள்ளார் என்றும், கர்னல் டாட் (Col. Tod) இராசத்தான் (Rajasthan) வரலாற்றில் சிவாஜியின் முன்னோர் பற்றி மீவார் பட்டர்கள் (Bhats or troubadours) இடம் இருந்துபெற்ற வமிசாவளியுடன் ஒத்துவருகிறதென்றும் சர்தேசாய் கூறுவர்."[1]

தஞ்சைப்பெரிய கோயில் கல்வெட்டில் கூறப்பட்ட மாலோஜியின் முன்னோர் பற்றி சி. வி. வைத்யா அவர்கள் கருத்துப் பின்வருமாறு:- The names of twelve ancestors before Maloji, given in the Brihadeeswara inscription, are imaginary, being a multiplication of the name Ekoji, founder of the Tanjore family and these again do not tally with the names given in the accepted genealogy”[2]

4. 96 சுத்திரியவமிசம்

க்ஷத்திரிய வமிசம் தொண்ணுற்றாறு என்றும், அவற்றின் பெயர் விவரமும் போ.வ.ச.விலும் (சுவடிகளிலும்) கூறப்பட்டுள்ளன."[3]

மராட்டிய க்ஷத்திரியர் ஷஹன்னவாகுலி [4] (Shahannevakuli) எனப் பெறுவர் என்றும், அவர்களுக்கிடையேதான் உணவு கொள்வினை கொடுப்பனை நடைபெறும் என்றும்,[5] இப்பெயர்களுள் சில விடப்படுதலும் சில சேர்க்கப்படுதலும் உண்டு என்றும் . தொண்ணுாற்றாறு என்ற எண்ணிக்கை நிலையாக இருக்கும் என்றும், இந்த 96 குலப்பெயர்கள் தஞ்சை மராட்டியக் கல்வெட்டொன்றில் தான் உள்ளது என்றும்,[6]

அந்தப் பட்டியல் மிகவும் முக்கியமானது என்று இதனான் கருதப்பெறும் என்றும் திரு. வைத்யா அவர்கள் கூறியுள்ளார்."[7]

5. சிவாஜியைப் பற்றிய செய்திகளுட் சில சொல்லப்படாமை

(அ) அவுரங்கசீபு தன் மாமன் சாஸ்தாகான் (Shaista Khan) தக்கணத் துக்குப் பல பிரபுக்களுடன் அனுப்பியது போ.வ.ச.வில் (பக்.47)இல் சொல்லப்


  1. 34. டிெ பக்கம் 6 இன் அடிக்குறிப்பு.
  2. 35. Shivaji Souvenir, “Are the Bhonsles Khatriyas”, Vaidya C.V., page 8
  3. 36. போ.வ.ச. பக். 20: இந்நூல் பக்கம் 30
  4. 37. சிவாஜி சாவளிர் பக். 76
  5. 38, சிவாஜி சாவளிர் பக். 81
  6. 39. சிவாஜி சாவணிர் பக். :82
  7. 40. ௸

69-25