பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

194

தஞ்சை மராட்டிய


பட்டது. ஆனால் சாஸ்தாகான், ரம்ஜான் ஆறாவது நாளில் இரவில் (5-4-1663இல்) தூங்கிக் கொண்டிருக்கும்பொழுது, சிவாஜி சில வீரர்களுடன் சாஸ்தாகான் தங்கியிருந்த இடத்துக்குச் சென்று, கலாம் விளைவித்துப் பலரைக் கொன்று, சாஸ்தாகானைத் தாக்கியபோது சாஸ்தாகானின் கட்டைவிரல் துண்டிக்கப்பட்டது. சாஸ்தாகான் தப்பியோடினான்[1]. இச்சாஸ்தாகான் காதை போ. வ. ச. வில் இல்லை.

(ஆ) சிவாஜி அவுரங்கசீபின் தர்பாருக்குச் சென்றமை: சிவாஜி, ஜெய்சிங்கின் ஆலோசனையின்படி அவுரங்கசீபைக் காண்பதற்கு ஆக்ராவுக்குச் சென்றார். அங்குச் சிவாஜியின் பெருமைக்கு ஏற்ப எம்மரியாதையும் கொடுக்கப் பெற வில்லை. ஆகவே சிவாஜி மிகவும் மனம் நொந்தார். சிவாஜி ஆக்ராவில் சிறையில் வைக்கப்பட்டார். சிவாஜி தன் அறிவுக் கூர்மையால் தன் மகனுடன் பழக்கூடைகளில் ஒளிந்துகொண்டு வெளியேறினார். (ராஜ்கெடிக்கு (Raigarh) 12-9-1966இல் போய்ச் சேர்ந்தார்).[2]

(இ) சூரத்தைக் கொள்ளையிட்டமை[3]: சூரத் (Surat) இருமுறை கொள்ளைக்குள்ளாயிற்று. முதல் தடவை 1664இல் ஜனவரி ஆறாம் நாள் முதல் 10ஆம் நாள் வரை நிகழ்ந்தது. இதனால் ஒரு கோடி ரூபாமதிப்புள்ள பொன் வெள்ளி, முத்து, விலையுயர்ந்த மணிகள், சிவாஜிக்குக் கிடைத்தன. 3-10-1670இல் இரண்டாம் விசை சிவாஜி சூரத்தைத் தாக்கினார்; 5-10-1670இல் கொள்ளையுடன் திரும்பினார். இக்கொள்ளைகளின் மதிப்பீடு 66 லக்ஷம் ரூபாயாகும்."[4]

(ஈ) சிவாஜியின் கர்னாடகப் படையெடுப்பு:[5] இப்படையெடுப்பில் செஞ்சியைக் கைப்பற்றியமை, வாலிகண்டபுரத்தில் ஷெர்கான்லோடியுடன் போர் செய்து துரத்தியமை. திருவாதி (திருவதிகை), தேவனாம்பட்டினம் (கடலூரின் உட்கிடையூர்) ஆகியவற்றைக் கைப்பற்றியமை, கொள்ளிடத்தில் வடகரையிலுள்ள திருமழபாடியில் தங்கியமை, வெங்காஜி சிவாஜியைக் கண்டு, பின்னர்க் கொள்ளிடத்தை கடந்து சிவாஜியினிடம் விடைபெறாது வந்தமை, சிவாஜி மகாராட்டிரத்துக்குத் திரும்பியமை, 1677 நவம்பரில் கொள்ளிடத்தைக் கடந்து வந்த சிவாஜியின் படையொடு ஏகோஜி பொருதமை, இறுதியில் தோற்றமை, ரகுநாத்பந்த் ஏகோஜியைக் கண்டு உடன்படிக்கை செய்துகொண்டமை, பின்னர் 1680இல் பீஜப்பூர் சுல்தானிடமிருந்து


  1. 41. சர்க்கார் (1) பக்கம்; சென் - (சிவதிக்விஜய) - பக்கம் 201-4
  2. 42. சர்க்கார் (1) பக்கம் 151-157 சென் - (சிவதிக்விஜய) பக்கம் 218-19
  3. 43. சர்க்கார் (1) பக்கம் 98-100, 171-173
  4. 44. சர்க்கார் (1) பக்கம் 174
  5. 45.சர்க்கார் (1) பக்கம் 292-300 Sen-Siva Chatrapati - (Sabhasad) Page 122-129;Srinivasan, page 154-167.