பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மன்னர் வரலாறு

195

கர்நாடகத்தில் தான் வென்ற நாடுகளின் உரிமை பீஜப்பூர் சுல்தானிடமிருந்து பெற்றமை ஆகிய செய்திகளை வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர்.

சிவாஜி கி.பி. 1677இல் சந்தி பிரதேசத்தை (செஞ்சையை)க் கைப்பற்றினார். 1680இல் சிவாஜியும் பிரெஞ்சுக்காரரும் உடன்படிக்கை செய்து கொண்டனர் என்பவை மட்டும் போ.வ.ச.வில் உள்ளன (பக்.58). மேலும் போ.வ.ச வில் சிவாஜி ராஜா சேதுயாத்திரையின் பொருட்டு இரகசியமார்க்கமாகச் சென்று யாத்திரையை முடித்துக் கொண்டு" தஞ்சாவூர்க் கோட்டைக்கு வந்து சென்றதாகக் கூறப்பட்டுள்ளது. மறுமுறையும் சேதுயாத்திரை செய்ததாகவும் உளது[1]. வரலாற்றாசிரியர்கள் சேது யாத்திரையைக் கூறவில்லை.

சிவாஜியும் ஏகோஜியும் கொள்ளிடக்கரையில் கண்டமை முதலியவற்றை சபாஸத்[2], சிவதிக்விஜயம்[3] சிட்னிஸ்[4] கூறியுள்ள போதிலும் போ.வ.ச.விலும் மெக்கன்சி சுவடிகளிலும் இல்லாமை வியப்புக்குரியது.

இங்ஙனம் சில செய்திகள் போ.வ.ச.வில் (மெக்கன்சி சுவடிகள் ஆகியவற்றுள்) சொல்லப்படாமைக்குரிய காரணம் புலப்படவில்லை. ஒரு வேளை சிவாஜியின் பெருமைக்கு இழுக்குவருங்கொல் என்று கருதி இத்தகையவற்றைச் சேர்க்காது விட்டனர் என்று நினைக்க இடம் தருகிறது.

சாஸ்தாகான் தூங்கிக் கொண்டிருக்குங்கால் நள்ளிரவில் சென்று கொல்ல முயன்றமை வீரச்செயலாகக் கருதப் பெறமாட்டாது. அவரங்கசீபின் சிறையினின்று பழக்கூடைகளில் மறைந்து வந்தமையும் வீரச்செயலாகாது; சூழ்ச்சித் திறன் ஆகக் கருதப்பெறலாம். சூரத் கொள்ளையும் கொள்ளையர் செயலாகக் கருதப்படுமேயன்றி வீரச் செயலாவது யாங்ஙணம்? கர்நாடகப் படையெடுப் பில் தன் தம்பியாகிய ஏகோஜியோடு போரிட்டமை முதலியன நிகழ்ந்தமையின் வீட்டுச் சண்டை இருசாரார்க்கும் பெருமை தாராது என்று கருதியிருத்தல் கூடும்.

இன்னோரான்ன காரணங்களால் சிவாஜியைப் பற்றி மராட்டியில் எழுதிய சபாஸத் முதலியவற்றுள் கண்டுள்ள மேற்கண்ட செய்திகள் தஞ்சாவூரில் எழுதப்பெற்ற சுவடிகளிலும் கல்வெட்டிலும் விடுபட்டன.

பொது:

அ. ஆராய்ச்சியாளர் கத்ரே

தஞ்சாவூரில் தங்கியிருந்து மோடி ஆவணங்களையெல்லாம் வகைப்படுத்திய மேஜர் நாராயண பாலகிருஷ்ண கத்ரே, "வரலாற்றாசிரியர் ராஜ் வாடே, திரு. சாம்பமூர்த்தி ராவ் ஆகிய இரண்டு வெளியீட்டாளர்களின்


  1. 46. போ.வ.ச.பக், கிரி-41
  2. 47. சென். (சபாஸ்த் பக்124-128)
  3. 48. சென் வைதிக்விஜய) - பக். 226, 220-22ல்
  4. 49. சென் - (சிட்னிஸ்)-பக். 221-226, 247-249