பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

204

தஞ்சை மராட்டிய


"தாவிளை" என்ற சொல்பயன்படுத்தியமையும், போடுவாள் (போடுவார்கள்). துணியமாட்டாள் (துணியமாட்டார்கள்) என்று கூறியமையும் இதை எழுதியவர் பார்ப்பனர் என்பதைக்காட்டும்.

பல வாக்கியங்கள், தவறான அமைப்புடையவை; சுவடியை நோக்கின் அறியலாம்.

இம்மெக்கன்சி சுவடி, டெயிலர் தொகுத்த கீழ்த்திசை வரலாற்றுச் சுவடி, கள் மூன்றாம் தொகுதியில்[1] பக்கம் 298இல், எண் 798ஆகக் குறிப்பிடப் பெற்றுள்ளது. (3) டி3762 எண் உள்ள சுவடி

இது தஞ்சை சரபோஜி மன்னர் வமிசாவளி என்ற தலைப்புடையது; எம் 75 என்று குறிக்கப்படுவது. இது 29x17.4 செ. மீ. அளவில் 82 பக்கங்களுடையது; பக்கம் ஒன்றுக்கு 40 வரிகள் உண்டு. இதுவும் டி 3180 போன்றே முழுச்சுவடியாகும். இதன் முகப்புப் பக்கம் ஒன்றனுள் இது தஞ்சாவூர் வேத நாயகம்[2] சேகரித்தவற்றைச் சேர்ந்தது என்றும், 4-4-1804 இல் தரங்கம்பாடியில் இருந்த பாதிரிகள் ஜான், ரோட்லர் என்பவர்களின் ஆணையின்படி இது தரங்கம் பாடி மிஷனரியிடம் இருந்த சுவடியினின்று படியெடுக்கப்பட்டது என்றும் தெரிகிறது.[3]

அடுத்த ஏட்டில் 17-6-25 என்று குறிப்பு இருக்கிறது. இதனை (Shelf No.) நிலைக்கால் தட்டு எண் என்று திரு. மகாலிங்கம் அவர்கள் குறிப்பிடுகிறார். இதில் மெக்கன்சியின் அரக்குவைத்த முத்திரை (Seal) காணப்படுகிறது. இதில் C. C. M. என்ற எழுத்துக்கள் இருத்தல் கூடும்.

இச்சுவடியும் முழுச்சுவடியாகும். எழுத்துருவம் செம்மையாக இல்லை. எல்லாம் பிழையாகவே உள்ளன. பழைய கையெழுத்துச்சுவடிகளைப் படித்தலில் மிக்க பயிற்சியுடையவர்களாலே தான் இச்சுவடியைப் படிக்கவியலும். டி. 3180 சுவடியையும் இதனையும் ஒப்பிடின் டி. 3180, இதனைப் பார்த்துப் பெரும்பாலும் திருத்தி எழுதப்பட்டுள்ளது என்பது புலனாகும்.[4]


  1. 7. Taylor, Oriental Historical Manuscripts, Vol. III ச. .
  2. வேதநாயக சாஸ்திரி (1774-1864); வரலாறு இதன் இறுதியில் காண்க
  3. .9. “Historical account of the Tanjore family copied from a ms. in possession of the Tranquebar Missionary communicated by the Rev. Messrs. John and Rottler, Copied April 4, 1804” ... (T. W. Mahalingam, Mackenzie Manuscripts, volume I, University of Madras, 1972, Page 142); William Taylor, Catalogue Raisonne Oriental Manuscripts in the Govt. Library, Madras, 1860) Vol. I, No. 798, Page 278.
  4. 10. This (D3180) has the appearance of a fairer ... copy more lieusurely made than the foregoing (D 3762). This is a duplicate of the foregoing