பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மன்னர் வரலாறு

205


இது 4-4-1804இல் பெயர்த்தெழுதப்பட்டது என்பதும், தரங்கம்பாடியிலிருந்தது அச்சுவடி என்பதும் வியப்புக்குரியதாகும்.

இதனானும் பெரியகோவில் மராத்திக்கல்வெட்டு வெட்டி முடிந்த அண்மைக்காலத்திலேயே தமிழ்ச்சுவடி ஒன்று தரங்கம்பாடியில் இருந்தது என்று ஊகிக்க இடம் தருகிறது.

டி. 3762, டி. 3180, டி. 3119 என்பவற்றைக் கால அடிப்படையில் முறைப்படுத்தலாம். இவை ஒன்று மற்றொன்றினும் செப்பமாக இருத்தலின் இந்த முடிவு எடுக்கப்பட்டது.[1]

(4) டி 3779, டி 3190, டி 3926, ஆர் 4049

இவை நான்கும் ஒரே மாதிரியான சுவடிகளையாகும்.

டி 3779: இது தஞ்சை மராட்டிய மன்னர் வமிசாவளி என்ற தலைப்புடையது; 13 பக்கங்கள் கொண்டது; பக்கத்துக்கு 40 வரிகளுண்டு. இதற்கு எம் 76 என்ற எண்ணும் கொடுக்கப்பட்டுள்ளது. இது மிகவும் சிதைந்துள்ளது. இது எம் 76 இல் உள்ள 19 சுவடிகளில் 16 ஆவது சுவடியாகும்; பக்கம் 93 முதல் 109 வரையுள்ளது.

டி 3190: இது மேலதின் காப்பீடு சுவடி (Restored) ஆகும். இதில் ஶ்ரீராம செயம் என்று தொடக்கத்தில் உள்ளது. இது துரைசாமிப்பிள்ளை என்பவரால் 28-2-1891 இல் காப்பீடு செய்யப்பட்டது என்ற குறிப்புக் காணப்பெறுகிறது.

டி 3926: இது 16 பக்கங்கள் கொண்டது: பக்கத்துக்கு 30 வரிகள் உண்டு. பெரிய வால்யூம் எண் IV இல் பக்கம் 277 முதல் 292 வரை எழுதப்பட்டுள்ளது. இச்சுவடி பல இடங்களில் சிதைந்துள்ளது. இது 1838 இல் காப்பீடு செய்யப்பட்டது. இஃது ஒரு கடிதம் ஆகக் கருதப்படுகிறது.

"அமுருதசிங்கு மகாராசா இராட்சிய பாரம் பண்ணுகிறனாளையிலே சரபோசி மகாராசா அவர்கள் கூட்டத்தார் அமுருதசிங்கு மகாறாசாவுக்கு இராட்சியம் செல்லாதென்பதைப் பத்தியும் சரபோசி மகாராசாவுக்குச் செல்லுமென்கிறதை ஒப்பிவிக்கும்படியாகவும் கனம் பொருந்திய மகாராசஶ்ரீ கும்பினி யாரவர்களுக் கெழுதிக்கொடுத்த இயாதியைப் [2]பார்த்த விடத்தில் பெதற்ந்து[3]அ எழுதப்பட்டது”


  1. document and has the appearance of being a copy made of it - (A Descriptive Catalogue of the Tamil Manuscripts in the Government Oriental Manuscripts Library, Madras, Vol, VIII.
  2. 11. The first (marked 17-6-25) bears the autograph of Col. Mackenzie. ... The second Manuscript (marked 17-5-34) is a copy from the first and is more legible. The third (17-4-49 D 3190) is an incomplete copy with slight variations: it has not been noticed by Wilson or Taylor" - (T. V. Mahalingan, Page 142)
  3. 12. இயாதி - ஆழ்ந்த கருத்துடன் எழுதப்பட்டது 12.அ. பெதற்ந்து - பெயர்த்து