பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

208

தஞ்சை மராட்டிய


இச்சுவடியில் பல இடங்களில் சொற்கள் விடுபட்டுள்ளன. அவ்விடங்களில் டி 3926 இலும் விடப்பட்டுள்ளது.

இச்சுவடியில், "தில்லையாகிய சிதம்பரத்தில் சபாநாதருக்கும் தில்லைக் கோவிந்த ராஜருக்கும் நித்திய பூசை தடைப்பட்டது. திருவாவடுதுறையில் எழுந்தருளியிருந்த சிவப்பிரகாச சுவாமிகள் சிதம்பரத்துக்குச் சென்று தில்லை மூவாயிரவர்க்கும் வைணவர்களுக்கும் ஏற்பட்ட சண்டையைத் தீர்த்து வைத்தார்" என்ற ஒரு செய்தி[1] (இடைப்பிறவராலாய்) "நியாயவிசாரணை செய்வது ஆட்சியாளர் கடமை" என்பதற்கு எடுத்துக்காட்டாகத் தரப்பட்டுள்ளது.

ஆர் 4049: இது டி 3926 இன் காப்பீடு சுவடியாகும். இது 16 பக்கங்களுடையது. இது தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் பெயர்த்தெழுதிப் பெறப்பட்டுள்ளது.

(5) p. 3179

இது "சோழர்க்குப்பின் இராயர் வடுகர் மராட்டியர் முதலானோர்களின் பெயர்" அட்டவணை" என்ற தலைப்புடையது. இது பற்றிய குறிப்புப்பின் வருவது.[2]

இது சோழமன்னரது ஆட்சிக்குப் பிற்காலம் இராய மன்னரது அரசாட்சி முறையினையும், அதன்பின் நாயக்க மன்னர்களுடைய பெயர் முறைமையினையும், அதன்பின் போசல மராட்டிய மன்னர்களின் ஆட்சி முறையினையும் முறையாக எடுத்துக்கூறி மெக்கன்சி துரைக்கு ௸யாரின் ஊழியராம் "வேதநாயக்கன்" என்னுமவர் எழுதிவிடுத்த முறையிலே அமைந்திருக்கின்றது. முற்றும் உள்ளது.

நான்கு பக்க அளவுடைய இச்சுவடியில் மராட்டிய மன்னர்களைப் பற்றியது பின்வருமாறு:

'......விசையராகவ நாயக்கனுக்குப் பிறகு அவன் மகன் செங்கமலதாசு மூன்று மாத மாத்திரம் பட்டத்திலிருந்தான். அதன் பிறகு ஷகளனஎரு௵[3]" துவக்கி புசிலை [4]ராசாக்களாகிய மறாட்டியர் இறாட்சியபாரம் பண்ணிவருகிறது. அதற்கு விபரம் எப்படியென்னில்,

மறாட்டியனாகிய எகோசி ராசா இராட்சத வருஷம் தை மீ சத்தமியில் சினேகத்தின் பேரில்த் தஞ்சாவூர்க் கோட்டைக்குள்ளே வந்து கோட்டையை ஆக்கிரமித்துக் கொண்டு அதுமுதல் துன்மதி மட்டும் எ வருஷம் ஆண்டார்


  1. 20. ஆர் 10:49, பக்கம் 54-56
  2. 21. A Descriptive Catalogue of the Tamil Mss. of the G. O. M. L. Madras, 1954, Vol. IX, pp. 2838, 2839.
  3. 22. 1675 ஆம் வருஷம்
  4. 23. புசிலை - போசலே.