பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210

தஞ்சை மராட்டிய



இவர் ஸ்காத்லாந்து நாட்டில் லூவித்தீவில் ஸ்டோர்னோ நகரில் கி.பி. 1754-இல் பிறந்தார். இவர் தன்னுடைய முப்பதாவது வயதில் (கி.பி. 1783இல்) இந்தியாவுக்கு வந்தார்; தன் எஞ்சிய வாழ்நாள் முழுவதும் (கி. பி. 1821வரை) இந்தியா, இலங்கை, ஜாவா ஆகிய நாடுகளில் பணியிலிருந்து, அயராதுழைத்துப் படிப்படியாகப் பணி உயர்வு பெற்று வாழ்ந்தார்; ஒருமுறைகூடத் தன்தாய் நாட்டுக்குச் செல்லவில்லை.

இவரது உடன்பிறப்புக்களில் அலெக்சாண்டர் என்பவர் கனடாவிலும், கென்னேத் என்பவர் தெரியாத ஒரிடத்திலும், தமக்கையார் மேரி என்பவர்.தன் பிறந்த ஊராகிய ஸ்டோர்னோவிலும் இருந்தனர்.

இவர் 2-9-178இல் கிழக்கிந்தியக் கம்பெனியில் பணியில் சேர்ந்து சென்னைக்கு ஒரு பொறியாளராக வந்தார். இவர் வந்தபொழுது கவர்னர் ஜெனராலாக இருந்தவர் வாரன்ஹேஸ்டிங்க்ஸ் ஆவர்.

இவர் போர் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுப் படிப்படியாகப் பதவி யுயர்வு பெற்றார்."

நில அளவையாளராகப் பணியாற்றியபொழுதும் இவர் பதவியுயர்வுகள் பெற்றார். 1810 டிசம்பரில் சென்னையில் தலைமை நில அளவையாளர் ஆக

நியமிக்கப்பெற்றார். 1815இல் இயக்குநர் குழுவினர்’ மூன்று மாநிலங்களுக்கும் தனித்தனியிருந்த நில அளவையாளர் பதவியைப்போக்கி, இந்தியா முழுமைக் குமாக நில அளவையாளர் பதவியை உண்டு பண்ணின பொழுது, இவர் அப் பதவி அளிக்கப் பெற்றார்; வில்லியம் கோட்டையில்" தங்கியிருந்தார். பொறி யாளர்களுக்குரிய நாட்படி, ஊதியம் முதலியவற்றோடு மேற்கொண்டு ஊதிய மாக ரூ. 1500 பெற்றார்.

1818இல் ராயல் ஏஷியாடிக் சொசைட்டியில் ஒரு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இவரது பணி 1811இல் ஜாவாவிலும் நட்ைபெற்றது.

இங்ங்ணம் போர்ப் பணியிலும் நில அளவைப் பணியிலும் இருந்தபோதி லும் இவரது தொகுப்புப்பணி சீராக நடைபெற்று வந்தது. s

3. Scotland 4. Island of Lewis b. Storno 6. “He was promoted as Lieutenant in March 1789, as captain in August 1793, as Major in January 1805, as Brevet Lieutenant Colonel in October 1809, as Regimental Lieutenant Colonel in November 1810 and finally as Colonel in August 1819 (Mackenzie Ms. Part I Ed., Mahalingam) 7. Surveyor General s. Mahalingam Page XII 9. Board of Directors 10, Fort William (Calcutta) 11. Fellow of Royal Asiatic Society.