பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன்னர் வரலாறு

211

 2II

கி. பி. 1796இல் இவர் ஈழத்துக்குச் சென்றிருந்தபொழுது ஈழம் பற்றிய செய்திகளைத் தொகுத்தார். இப்பணியில் இவருக்கு உதவியவர் காவல்லி வெங்கட போரையா? என்பவர் ஆவர் என்பர். மெக்கன்சி, இந்தியாவுக்குத் திரும்பியதும் தொகுப்புப்பணியில் ஈடுபட்டு ஒலைச்சுவடிகள், காகிதக் கை யெழுத்துச்சுவடிசுள் ஆகியவற்றைத் தேடித் தொகுத்தார். இவர் தேடித் தொகுத் தவை பெரும்பாலும் நாட்டு வரலாற்றைப் பற்றியனவேயாம்.

தான் சென்ற இடங்களில் எல்லாம் பல மொழியாளர்களுடைய உதவி இவருக்குக் கிடைத்தது. அவ்வுதவியாளர்கள் இவருக்கு உண்மையான உழைப்பு நல்கினர். அவர்களுக்கு இவர் மிகுந்த மரியாதை காட்டியதோடு அந்நாட்களுக் கேற்பச் சிறப்பாக.மாதவூதியமும் அளித்தார். சில சமயங்களில் தன் ஊதியத்தி லிருந்தும் அன்னோர்க்குச் சம்பளம் கொடுத்தார் என்றும் அறியவருகிறது."

இப்பணியில் இவருக்கு உதவியாக இருந்தவர்கள் போரையா (புர்ரையா), காவல்லி வெங்கட லெட்சுமையா, அப்துல் அஜீஸ், பாஸ்கரையா பாபுராவ், ராமசுவாமி, சீனிவாசையா, சிவராமையா முதலியவர்கள் ஆவர். இவர்கள் தமிழ் தெலுங்கு கன்னடம் முதலிய மொழிகளில் அறிவுடையராய் இருந்தனர். இவர்கட்கு 40 வராகன் முதல் 50 வராகன் வரை மாதவூதியம் தரப்பட்டு வநதது.

இவருடைய தொகுப்பு வேலைக்கு உதவும் பொருட்டு 1805இல் இவரு டைய மாதவூதியம் 200 வராகனுடன் 100 வராகன் சேர்த்துக் கொடுக்கப் பட்டது. ஒரு சமயம் கம்பெனி இயக்குநர் குழுவினர். இவரது தொண்டினைப் பாராட்டுமுகத்தான், இவருக்கு 9000 வராகன் நன்கொடை அளித்தனர்."

இத்தொகுப்புப் பணியை இடையீடின்றிச் செய்தமைக்கு இவர் செலவிட்ட தொகை 15000 பவுண்டுக்கு மேல் ஆயிற்று என்று தெரியவருகிறது."

12. Cavelly Venkata Boriah (போரையா என்ற சொல்லை "புர்ரையா' என்றும் படிப் பவருண்டு) இதுவே சரியாகலாம். இவர் 1776 இல் பிறந்தவர். 1803 இலேயே இறந்தார். “Kavali Venkata Borrayya”- Ramachandra Rao, C. V., Administration and Society in Medieval Andhra under the Later Eastern Gangas and the ుmsa Gajapatis, Manasa Publications, Nellore, 1976, Page 23 & F.m. No. 36.

1s. “So enthusiastic was Mackenzie”, says Sandes. “that he spent a large part of his fortune in the pursuit of his hobby”- W.C. Mackenzie, Colonel Colin Mackenzie, Page 210

14. Board of Directors 15. Mahalingam, Page XII.

16. The whole expense incurred by the collector is certified by Sir A. Johnston, to have amounted to upwards of £15,000" -Rev. William Taylor, Catalogue Raisonnee Oriental Manuscripts, Preface, Page X.