பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212

தஞ்சை மராட்டிய



இவ்வுதவியாளர்கள் தத்தம் பகுதிக்கு உரியவர்களே யாவர்; பெரும்பா லோர் பார்ப்பனர்களே யாவர். இவர்களுள் வெங்கட ல்ச்சுமையா என்பவர் மெக்கன்சிக்கு மொழிபெயர்ப்பாளருள் முதன்மையானவர் ஆவர். இதிற் கண்ட பாடிராவ் என்பவர் தஞ்சை மராட்டிய அரசர் வரலாற்றுத் தமிழ்ச்சுவடி யையும், தஞ்சைப் பெரிய கோயிலில் உள்ள மராட்டியக் கல்வெட்டையும் எழுதியவர் ஆவர். இவர் புதுச்சேரி காரைக்கால் முதலாகிய கரையோரப் பகுதிகளில் 24-12-1816 முதல் 27-5-1817 வரை மெக்கன்சியின் பொருட்டு ஆற்றிய பணிகள் பற்றிய நாட்குறிப்பை வில்சன் என்பார் தம் நூலில் கொடுத் திருக்கிறார். =

இத்தகைய வுதவியாளர்களைக் கொண்டு சேமித்த தொகுப்புக்களை, அந்நாளில் கவர்னர் ஜெனரலாக இருந்த ஹேஸ்டிங்ஸ் பெருமகனார்," கிழக் கிந்தியக் கம்பெனியின் சார்பில், மெக்கன்சியின் மனைவியிடத்தில், 10,000 பவு.ண்டு அளித்து விலைக்கு வாங்கினார். -

இவர் தன்னுடைய அறுபதாவது வயதில் 18-11-1812இல் பெட்ரோ னெல்லா ஜாகோமினா பார்டெல்ஸ் என்பவரை மணம் செய்து கொண்டார்."

1820 நவம்பர்த் திங்கள் முதற்கொண்டு இவர் நோய்வாய்ப்பட்டார். 8-5-1821இல் கல்கத்தாவுக்கு அருகிலுள்ள செளரின்கீ’ என்ற ஊரில் தன் இல்லத்தில் 68ஆவது வயதில் இவ்வுலக வாழ்வை நீத்தார்.

இணைப்பு (2) சுவிசேட கவிராய வேதகாயக சாஸ்திரி (1774-1864)

வேதநாயகர் திருநெல்வேலியில் கி. பி. 1774இல் வேளாளர் மரபில் தோன்றிய கிறித்தவர் ஆவர். இவரது பன்னிரண்டாவது வயதில் இவரை ஸ்வார்ஷ் (Schwartz) பாதிரியார் தஞ்சைக்கு அழைத்துவந்தார்; தரங்கம்பாடியில் இருந்த ஒரு கல்வி நிலையத்தில் மாணாக்கராகச் சேர்த்து இரண்டாண்டுகள் கல்வி பயிலச் செய்தார். பின் வேதநாயகர் தஞ்சையில் நிறுவப்பட்டிருந்த தத்துவக்கல்வி நிலையத்தில் (Theological Seminary) தலைமையாசிரியராகப் பணியேற்றார். அந்நாளில் தஞ்சையில் அரசு வீற்றிருந்தவர், அருங்கலை விநோதராகிய சரபோஜி மன்னர் ஆவர். வேதநாயகர் ஒரு சிறந்த கவிஞர்.

17. “Wenkata Lutchmeah - Head Interpreter and translator to the late Surveyor General” - W. C. Mackenzie, Colonel Colin Mackenzie, Page 211

18. “Report of Babu Rao, Mahratta Translator to Col. C. Mackenzie, of his journey to Pondicherry, Karaical along the coast, for the purpose of collecting historical information, coins, etc., from the 24th December, 1816 to 27th May 1817” - Wilson, H.H., Wilson's Mackenzie collection, pp. 599-621.

19. Marquis of Hastings, Governor General of British India.

z o. Petronella Jacomina Bartels 21. Chowringhee