பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214

தஞ்சை மராட்டிய

III. திருவிடைமருதூர் மன்னர் சார்பான சுவடிகள்

அமர்சிங்கு அரசிழந்த பின்னர்த் திருவிடைமருதூரில் தங்கியிருந் தார். அவர் பரம்பரையினரும் திருவிடைமருதுரிலேயே தங்கியிருந்தனர். அவ் வரச பரம்பரையினரின் சார்பாகப் போன்சலே வமிச வரலாறு எழுதப்பட்டது. அங்ங்ணம் எழுதப்பட்டவற்றுள் இரண்டு சுவடிகள் கிடைத்துள்ளன. அவை (1) திருமுடிசேதுராமன் சுவடி (2) நாகநாத மொயித்தே ராவ் சுவடி.

(1) திருமுடி சேதுராமன் சுவடி

இது "இறாஜ சரித்திர வமுஷாவளி" என்ற பெயரில் புதுவை மேயர் திருமுடி சேதுராமன் அவர்கள் வசமிருந்த சுவடியாகும். இது 19-2-1956 இல் ச் சரசுவதி மகாலில் நன்கொடையாகப் பெறப்பட்டுக் காப்பீடு சுவடி எண் 1248 ஆகப் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இச்சுவடி 1954இல் படி யெடுக்கப்பட்டிருத்தல் வேண்டும் என்பது இறுதியில் ஒரு கையொப்பத்துக்குரிய தேதியினால் அறியக்கிடக்கிறது. இச்சுவடி தமிழ்ப் பல்கலைக் கழக அரிய கையெழுத்துச் சுவடித் துறைக்காகப் படியெடுத்துக் கொணரப்பட்டுள்ளது.

இச்சுவடி, 'மத்தியார்ச்சுனத்தில் (திருவிடைமருதூரில்) மோகம் (முகாம்) செய்திருந்த றாஜேழரீ பிரதாப சிங்கp றாஜேசாயபு' காலத்தில் எழுதப்பட்டது இச்சுவடியின் இறுதியில்,

"(பிரதாப சிம்ம ராஜா) சுவீகாரம் செய்து கொண்ட காலம் சகம் 1770 கிறிஸ்து 1849 ஜனவரி 15 ஆம் நாள்'

என்றுள்ளது. மேலும், இதில் பக்கம் 3இல்,

'இது சாலி வாகன செக்கம் 1771 செல்லா நிண்ட’சவும்மிய வருஷம்

வையாசி மீ" 2க்குச் சரியான இஜ்ரி சன் கமம்சயின் மையாதீன் அலப்.ஜமா திலாகற் மீ" 18வ கிரிஸ்து வருஷம் 1849 மே 13 வ.'

என்றுள்ளமையால் 13 - 5 - 1849இல் மூலச்சுவடி எழுதி முடிக்கப்பட்டது என

அறியப்பெறும்.

அமர்சிங்கு காலம் வரையிலும் ஆட்சி செய்திருந்த அரசர் வரலாற்றை

எழுதித் தருக என்று புதுச்சேரி கலெக்டர் ஆகிய ஆன்ரபிள் மேஸ்த்தர் மொம் .

1. செக்கம் - சகம் 2. செல்லாநிண்ட செல்லாநின்ற 3. சன் - ஆண்டு (year): கமம்சைன் - 50; மயாதைன் - 200; அலப் - 1000;=1250 4. ஜமாதில் ஆஹர் என்ற மாசம்