பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன்னர் வரலாறு

215



பர்ன் ஆணைப்படிக்குப் பிரதாப சிங்கரின் ஒன்றுவிட்ட அம்மானாகிய வஜ ராத்மா சிவாஜி சுப்பராவு காடேராவு என்பவர். தன்னிடம் மராட்டிய மொழி யிலிருந்த இராஜ சரித்திர வமிசாவளி’ என்ற நூலைப் பார்த்துத் தமிழில் எழுதித் தந்தார் என்று தெரியவருகிறது. ---

தஞ்சை ஆட்சியை யிழந்து, ஓய்வூதியம் பெற்றுத் திருவிடை மருதூரில் தங்கியிருந்த அமர்சிங்கு பற்றியும், அவர் மகன் பற்றியும் இச்சுவடியில் அதிகம் எதிர்பார்க்கலாம். ஆனால் அன்னோர் பற்றி வரலாற்றில் குறிப்பிடத்தக்க சிறப்புச் செய்திகள் இல்லையென்றே சொல்லலாம். =

போன்ஸ்லே வமிச சரித்திரமாகிய மராத்திக் கல்வெட்டு மெக்கன்சி சுவடிகள் ஆகியவற்றினின்று திருமுடி சேதுராமன் சுவடி மிகுதியாக வேறு பட்டுள்ளது என்று கருதுவதற்கில்லை. எனினும் இதனுட்காணும் சிறப்புச் செய்திகள் முன்னே ஆங்காங்கு உரிய இடங்களில் அடிக்குறிப்பாகத் தரப்பெற் றுள்ளன. அவை தொகுத்துக் கீழே தரப்பெறுகின்றன:

1. சம்பு மகாராசா முதல் ஷாஜி வரையில் போ. வ. ச. வில் ஆண்டு கள் குறிக்கவில்லை. இச்சுவடியில் அன்னோர் பிறந்த சகர யாண்டுகள் குறிக்கப்பட்டுள்ளன.

2. சரபராசா பிதிலியூர் என்கிற சமஸ்தானத்தைச் சாகீராகப் பெற் றார் என்று போ. வ. ச. (பக். 2) இல் கூறியிருக்க, இந்நூல் சகம் 1122 (கி. பி. 1200) இல் பெற்றார் என்றும், அது முதல் இவர் சாகீர்தார் என்று பேரடைந்தார் என்றும் (பக்கம் 7-8இல்) அதிகமாகவுள்ளன.

3. இரண்டாவது யேகோஜி ராஜா சாத்தாராவைப் பிடித்தது போ. வ. ச. வில் உண்டு. பிடித்துக்கொண்டு சிம்மாசனாதிபதி யானார் (பக். 10) என்பதும், அதுமுதல் மகாராஜாசாயபு என்று பேரடையலானார் (பக். 11) என்

பதும் இதில் அதிகமானவை.

4. பரசோஜி வரை அதாவது எட்டுப்பட்டம் வரை இரண்டு நகரங் களின் (பிதலியூர், சாத்தாரா) சிம்மாசனாதிபதிகளாய் (பக்கம் 15) ஆண்டு கொண்டிருந்தனர்.

5. பீமசேனன் துச்சாதனனோடு போர் செய்து சிறந்தது போல ஷாஜி (பட்வாடி) போரில் சிறப்புற்றார் (பக். 35)

6. ஷாஜி ராஜாவுக்கு அல்லியெதல்லா தன்னுடைய ராஜ்யத்தில் பாதி கொடுத்தார் என்று போ. வ. ச. பக். 15இல் கூறத் திருமுடி சேதுராமன் சுவடி யில் (பக். 39) நாலில் ஒரு பங்கு கொடுத்தார் என்றுளது.

7. போ. வ. ச. பக்கம் 17இல் சில செய்திகள் விடுபட்டுள்ளன என் பதை மெக்கன்சி சுவடிகள் மூன்றினின்றும் அறியப்பெறும். அம் மெக்கன்சி