பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன்னர் வரலாறு

9

 9. யில்லை யென்று சொன்னர்," அப்போ அந்தப்பக்கிரி சற்று நேரந்தியானித்துப் பார்த்து மாளோஜிருஜாவே உமக்கு ரெண்டு பிள்ளைகளுண்டாகிருர்கள் அவாள் மஹா சூராளும் மஹாபாக்கியவந்தாளுமாகயிருந்து அவர்களுடைய வம்சமும் அபிவிற்த்தியாகி அந்த வமிசத்தில் உண்டாகிற பிள்ளைகளெல்லாரும் மஹாபாக்கியசாலிகளாக யிருப்பார்கள். அந்த ரெண்டுபிள்ளைகளுக்கும் நம் முடைய பெயரை வையும், பின்னையும் நாம் கொடுக்கிற பதாற்த்தத்தை பத்திர மாய் மரியாதையாய் வையுங்கோளென்று சொல்லி அஞ்சு பதாற்தம் கொடுத் தார். அதுகளுக்கு பேர் என்னவென்ருல் கிைனி " என்று சொல்லப்பட்ட ஒரு கத்தி, பதுமனி"யென்று சொல்லப்பட்ட ஒரு கத்தி, கவுயினம்" ஒண்னு கலந் தீரா?" என்று சொல்லப்பட்ட ஒரு அங்கி; பஞ்சா' ஒண்னு; இந்த வஸ்த்துவுங்" குடுத்தார் பிற்பாடு மாளோஜி ருஜாவுக்கு சாலிவாகன சகம் தடுளங்க சாதாறன. வருஷ்ம் முதல் புத்திரன் ரெண்டாம் சஹஜிருஜா புறந்தார். அதின்_

66. கி. பா. பக்கம் 114 இல் ஷாஷரீஃப் என்ற முகமதியருடைய கோயிலுக்குச் சென்று தொழு தமையின் மாலோஜிக்கு மக்கள் பிறந்தனர் என்று எழுதி, அதற்கு அடிக்குறிப்பாக

“Both the Shivadigvijaya and the Shedgavkar Bakhars say that Maloji & his wife prayed at the tomb of the saint. He has long been dead and buried”

என்றெழுதியுள்ளார். சிவபாரத சரித்திரம் முகம்மதிய குருவைப்பற்றிக் கூறவில்லை; 'அந்த மாலோஜி ராஜா மனைவியோடு கூட புத்திர சந்தானமாக வேண்டுமென்று அந்த மகாதேவருடைய ஆராதனம் பண்ணிக் கொண்டிருக்கும்போது கொஞ்ச நாளைக்குப் பிறகு அவருடைய மனைவி உமாபாயி கர்பிணியானாள்' என்றுள்ளது (சிவபாரதம்-பக்கம் 4).

ஷாஷரீப் அகமது நகரில் இருந்தவர் என்று டஃப் கூறுவர் (பக்கம் 43). ፀ ? . ளுகினி-நாகினி (டி. 119) நாகின் (போ, வ. ச. பக். 7) 68. பதுமினி-பத்மினி (டி3119); பத்மின் (போ. வ. ச. பக். 7)

59. கவுdனம்-லங்கோடு (போ. வ. ச. பக். 7), இச்சொல்லுக்குமுன் "இந்த இரண்டு கத்தியும் தம்முடைய' என்பது டி3119 இல் உள்ளது. இந்த இரண்டு கத்தியும் சித்தபுருஷர் கொடுத் தனவாக இங்குக் கூறியிருக்க, இவ்விரண்டும் துக்கோஜி காலத்தில் கொடுக்கப்பட்டன என்று ஹிக்கி கூறுவர்:

“There is a story current that a fakir of Arabia presented this prince (Tukkoji) with two swords called Neygini and Pathmany possessing miraculous

influences. The swords are now preserved in the Madras Museum” (Hickey, page 85.)

70. கலந்திரா-பட்டிலுைம் பஞ்சிலுைம் செய்யப்பட்ட உடை (போ, வ. ச. பக். 7).

71. பஞ்சா: இது ஐந்து விரல்களையும் மேலே நீட்டிக் கொண்டிருக்கும் ஒரு கையின் உருவம். இது முகம்மதியர்களால் போற்றப்படும் ஐந்து பேர்களைக் குறிக்கும் அல்லா முகம்மது, அலி, பாத்மா, ஹஸன் ஹ-சேன் என்பவர்கனைக்குறிக்கும் என்றும் அல்லது பெரிய பலசாலி யாகக் கொண்டாடப்பட்ட அலி என்பவருடைய கையைக் குறிக்கும் என்றும் சொல்வர் (போ. வ. ச. பக். 7 அடிக்குறிப்பு)

72. இந்த வஸ்துவும்-இந்த ஐந்து வஸ்துவும் (டிச119). இவ்வைந்து பொருள்களைக் கொடுத்தமை திருமுடி சேதுராமன் சுவடியில் இல்லை (பக்கம் 17).

73. சகம் 1531-கி.பி. 1609. திருமுடி சேதுராமன் சுவடியில் "சாதாரண ஆண்டுக்குப் பதில் சவுமிய' என்றுள்ளது. இதுவே எல்.டி.சாமிக்கண்ணுப்பிள்ளை அவர்களின் எஃபிமரிஸுக்

கேற்பச் சரியானதாகும். ஷாஜி பிறந்தது 15-3-1594 (சர்தேசாய் பக்கம் ச1): 1894 (டஃப் பக்கம் 43) என்பர்.

69-2