பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218

தஞ்சை மராட்டிய



வுக்கும், தன் பேரனாகிய இராசத் மோஹிதின்கானை ஆதவானிக்கும், தன் மகன் நாசர் ஜங்குவைத் தேவகிரிக்கும், நிஜாம் அல்லிகானை ஜீராவுக்கும் அதி காரம் கொடுத்தனுப்பினார் (திருமுடி. பக்கம் 295-298).

30. அணவர்த்திகான் பசுபதி கோயிலில் தங்கியபொழுது பிரதாபசிங்கர் போரிட அனுப்பிய சர்தார்களின் பெயர்கள்; போர்ச் செய்திகள்; நாகோஜி ராஜா கலியுக பீஷ்மர் என்ற பேரடைந்தமை (பக். 331-337).

31. ஆர்க்காட்டுச் சுபாவை நாசர் ஜங்கு பிரதாபசிங்குக்கு அளித்தமை; அதனை முகம்மது அலிகானுக்கு மானோஜி அப்பா விட்டுவிட்டமை (235-53).

32. ஆங்கிலேயதுரைத்தனத்தார் லார்டு பிகட் (Lord Pigot) வழி துளஜா விற்கு ஆட்சியை ஒப்பித்தனர் என்பது வரலாறாகவிருக்கத் திருமுடியில் (பக்கம் 113), துளஜாவுடைய அரச பதவியை அவர் தம்பி அமரசிம்ம ராஜாவுக்கு அளிப்ப தாக முகம்மது அலிகானிடத்திலேயும் கூறித்தஞ்சைக்கு லார்டு பிகட்டு வந்தா ரென்றும் (403-405), இச்செய்தியை அமர்சிங்கிடம் கூற அவர் அதை மறுத்து (பக். 406) துளஜாவுக்கே பட்டம் தரவேண்டுமென்று கூறினாரென்றும், அங்ங்

னமே 1775, வைகாசி மீ 30வ துளஜா மீண்டும் அரசரானார் என்றும் திருமுடி யில் (பக். 407) உள்ளன.

33. அமர்சிங்கைத் திருச்சினாப்பள்ளிக்குப் பட்டாபிஷேகம் செய்வதாகக் கூறி லார்டு பிகட் சென்றார் (பக்கம் 408) என்றும், முகம்மது அலிகான் சர்ப்ப யாகம் செய்தமையால் லார்டு பிகட் இறந்தார் (பக்கம் 409) என்றும், துளஜா அமர்சிங்குக்குப் பவானிபாய் பார்வதிபாய் ஆகிய இருவரை மணம் செய்வித்தார் என்றும் (பக்கம் 409), தன் மகனும் தன் மகள்வயிற்றுப் பேர னும் இறந்தமையால் துளஜா வயிராக்கியம் கொண்டு, தன் தம்பியாகிய அமா சிங்குக்குப் பட்டாபிஷேகம் செய்யும்படி ஆணையிட்டார் என்றும் திருமுடி சேதுராமன் சுவடி கூறும்.

ஒரத்தாாடு சத்திரம்

காசிராமேசுவரப் பெருவழியில் தஞ்சாவூர்க்குத் தெற்கில் ஒரத்தநாடு என்ற சிற்றுாரில் காசி காவடி கொண்டு வருகிறவர்கள் தங்குவதற்கு வசதி யாகச் சரபோஜி சத்திரம் சாவடி தேவாலயம் எடுப்பித்தார் என்று திருமுடி சேதுராமன் சுவடி கூறும் (பக்கம் 450-452).

போ. வ. ச. வில் (பக்கம் 186-இல்) தனக்குத் திருமணம் ஆவதற்கு முன்னமே ஒரு பெண்மணியிடத்தில் சரபோஜி விருப்பம் கொண்டிருந்தார் என்றும், அவள் இவருக்கு இரண்டு குழந்தைகளையும் பெற்றாள் என்றும், இரண்டாவது பிள்ளைப் பேற்றில் அவளும் இறந்தனள் என்றும், அவ்வம்மை யார் விருப்பத்துக்கிணங்க அவ்வம்மையார் நினைவாகச் சத்திரம் முதலியன அமைத்தார் என்றும் கூறப்பட்டுள்ளன.