பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

222

தஞ்சை மராட்டிய

(பக். 424); இவர் சென்ற இடங்களிலெல்லாம் மழை பெய்தமையால் ‘மழை ராஜா’ என்று பெயர் வந்தது (பக். 425).

2. சமஸ்தானத்தில் புலிகளின் தொல்லை ஏற்பட்டது. அரசர் புலி வேட்டைக்குச் சென்று துப்பாக்கியால் புலியைக் கொன்றார். இங்ஙனம் 22 வேங்கைகளைக் கொன்றார் (பக். 427).

3. கம்பெனிக்குக் கட்ட வேண்டிய தொகை அதிகமாயிற்று. அதனால் தஞ்சைச் சமஸ்தானம் நான்கு சுபாக்களில் இரண்டு சுபாக்களைக் கம்பெனியார் தம்வசப்படுத்திக் கொண்டனர். அப்படிச் செய்தும் கொடுக்க வேண்டியது நிறைய இருந்தது (பக். 428-29)

4. 1795 இல் இராமேசுவர யாத்திரை (பக். 429-432); வழியில் தண்ணீர் கிடைப்பதரிதாயிற்று. இருப்பினும் அரசர் சென்றவிடமெல்லாம் மழை பெய்தது. குடி மக்கள் பலரும் யாத்திரையில் உடன் சென்றனர். இராமேசுர்வரத்தில் துலாபாரதானம் நாகப்பிரதிஷ்டை செய்தமை.

5. குடிவாரம் 100க்கு 30. இது குடிகளுக்குப் போதாமையைச் சிவராயர் கூறக்கேட்ட அமர்சிங்கு குடிவாரம் 100க்கு 40 ஆக்கினார். இது சேதுக்கரையில் கொடுத்த ஆணையாகும் (பக். 433-34)

மேற்கூறிய ஐந்தனுள் இறுதியில் கூறிய 100க்கு 40 வாரம் அமர்சிங்குக்குப் பெருமை தருவதாயுள்ளது.

அமர்சிங்கு பதவி நீக்கத்துக்குரிய காரணம்

துளஜாவின் மனைவியர் சரபோஜிக்குப் பட்டம் கிடைக்க வேண்டும் என்று சரபோஜியுடன் சென்னைக்குச் சென்று முயன்றனர்; ஆனால் பலனில்லை (பக்கம் 436).-

டுரியன் ரீஸிடென்டாக வந்தார்; சரபோஜிக்குச் செல்வாக்கு அதிகரிக்கலாயிற்று (பக். 437)

(ஆங்கிலேயருக்குச் செலுத்த வேண்டிய) தோஃபா பணம் பாக்கியாயிற்று. ஆகவே ஆங்கிலேயர் தஞ்சைச் சமஸ்தானத்தைத் தம்வசம் ஆக்கிக் கொண்டு “அஞ்சிலொரு பங்கை” அமர்சிங்குக்குக் கொடுப்பதாகக் கூறினர். அமர்சிங்கு இதனை யேற்றுக் கொள்ளவில்லை (பக். 440-443). ரெஸிடெண்டு வந்து சமஸ்தானத்தைக் கைவசப்படுத்துவதே உறுதி என்று கூறிச் சகம் 1720 (கி. பி. 1798) ஜூன் மீ 29 ௨ அமர்சிங்கை அரசபதவியினின்று நீக்கினார். (பக். 445-447). சரபோஜி பட்டமெய்திய பன்னிரு திங்களுக்குப் பிறகு சரபோஜி உடன்படிக்கை செய்துகொண்டு அஞ்சிலொரு பங்கு பெற்றுக்கொள்ள இசைந்தார் (பக். 449).