பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

228

தஞ்சை மராட்டிய

2. ஸஹாகவ் கல்மீ (Sabanav Kalmi Bakhar)

சிவாஜியின் காலத்தில் இருந்த ‘வாக்னீஸ’ என்பவர் சிவாஜியின் காலத்து நிகழ்ச்சிகளையெல்லாம் குறிப்பெடுத்துக் கொண்டிருந்தவராவர். இவர் ஒரு வரலாறு எழுதினார். அது 1685இல் முற்றுப் பெற்றது. ஆனால் அது முழுமையாகக் கிடைக்கவில்லை. கிடைத்த சில பகுதிகளை மட்டும் ஒரு தலைமுறைக்குப் பின் வாழ்ந்த கண்டோ அனாஜி மல்கரே (Khando Anaji Malkare) என்பவர் தொகுத்து இடையிடையே சில செய்திகளைச் சேர்த்து எழுதினார். இதனை வாக்னிஸ்-மல்கரே பக்கர் (Bakhar) என்று கூறுவர் (சர்க்கார் (1) பக்கம் 301).

இது ஸஹாநவ் கல்மீ பக்கர் (Sahanav Kalmi Bakhar) என்று வழங்கப் படுகிறது. இது 91 பகுதிகளையுடையது. (Sahanav = 91). இதளைப் பாரள். னிஸ் (Parassis ) “பாரத வர்ஷம்” என்ற இதழிலும். ராஜ்வாடே (Rajwade) “பிரபாத்” (Prabhat) என்ற இதழிலும், ஸானே (Sane) “காவியேதிஹாஸ்” (Kavyetihas) என்ற இதழிலும் வெளியிட்டுள்ளனர். வாகஸ்கர் (W. Wakaskar) என்பார் பல பாட பேதங்களுடன் மிகச் சிறந்த முறையில் பரோடா (Baroda) வில் 1930 இல் அச்சிட்டு வெளியிட்டார். ஃப்ரிஸ்ஸெல் (Lt. Frissel) என்பார் 1806 இல் ராய்கரில் (Raigarh) கிடைத்த சுவடியை ஆங்கிலத்தில் மொழி பெயர்ததிருந்தார். இவ்வாங்கில மொழிபெயர்ப்பும் வாகஸ்கர் (Wakaskar) பதிப்பில் காணலாம்.

3. சிட்ணீஸ் (Chitpis' Bakhar)

இது மல்ஹார் ராம் ராவ் சிட்ணீஸ் என்பவரால் எழுதப்பட்டது. ஷாஹுவின் ஆணையின் வண்ணம் 10-6-1810 இல் சிட்ணீஸ் எழுதத்தொடங்கினார் என்று இந்நூலின் தொடக்கத்தில் கூறப்பட்டுள்ளது. இந்நூல் ஏழுபகுதிகளையுடையது. மிகப் பெரிய நூல் என்று டஃப் கூறுவர். சிட்ணீஸ் எழுதிய இந்நூற்பகுதிகளுட் பலவற்றை ஆங்கிலத்தில் பெயர்த்துச் சபாஸத் நூலோடு எஸ். என். சென் (Surendranath Sen) வெளியிட்டுள்ளார். காசிநாத் நாராயண சனே (Sane) என்பவர் சிவாஜிக்குரிய பகுதியை 1924 இல் இரண்டாவது பதிப்பாக வெளியிட்டார். சிவாஜியின் பின்னவர் பற்றியதை 1924 இல் முதன் முறையாக வெளியிட்டார்.[1]

4. சிவதிக்விஜய (Shiva - digvijaya)

இது நந்தர்பர்க்கர் (P. R. Nandurbarkar), தண்டேகர் (S. K. Dandekar) என்பவர்களால் பரோடாவில் 1895 இல் வெளியிடப்பட்டது. இது 1718 இல் சிவாஜியின் சிட்ணீஸ் பாலாஜி ஆவ்ஜி (Balaji Avji) யின் மகன் கண்டோபல்லால் (Khando Ballal) என்பவரால் எழுதப்பட்டதாகக் கருதப்பட்டது. ஆனால் இதனைப் பின்னோர் ஒருவர் எழுதினார் என்று ஆய்வாளர் கருதுவர். இது பிழைகள் மலிந்தது; செய்திகள் காலமுறையில் குறிக்கப்படவில்லை என்றும் கருதப்படுகிறது. [2]இதுவும் மிகப்பெரிய நூல். இதன் சில பகுதிகளின் ஆங்கில மொழி பெயர்ப்பு சபாஸத் நூலின் பிற்பகுதியில் வெளியிடப்பட்டுள்ளது.


  1. J Sarkar, House of Shivaji, Chap. 201; K.N. Sane, Page 265.
  2. “Historical anachronisms of ludicrous absurdity abound” (Sarkar(1)Page 392)