பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன்னர் வரலாறு

11

 II பண்ணிக்கொண்டு வத்தார். அதற்கு பிற்பாடு சஹஜிருஜா யெவ்வறணமான பிற்பாடு மொதெ ருவுடைய குமாரத்தி துக்காவுபாயி' சாயபுவை முதல் கல்லியாணம் பண்ணிக் கொண்டார். அதுக்கு பிற்பாடு நிஜாம்ஷாவினுடைய அனு மதியினலே சஹஜிருஜா சாலிவாகன் சக்ாப்தம் தடுள்சல்உ" துற்மதி வருவித்

தில் தம்முடைய சொந்தருச்சிய' சிமாசனத்துக்கு உடையவரானர். அப்போ யாதவருஜா என்று ஒருத்தர் யிருந்தார். அவர்குமாரத்தி ஜிஜாவுவை சஹஜிரு.ஜா வுக்கு ரெண்டாம் கலியானத்துக்கு பிறார்த்தினைபண்ணிக் கொடுத்தார். இந்த சஹஜி ருஜாவுடைய தம்பி சரபோஜிருஜா என்கிறவர் விசுவாசருஜாவுடைய குமா ரத்தி துற்க்கா பாயியை* கலியாணம் பண்ணிக் கொண்டார். கொஞ்சநாளேக்கு பிற்ப்பாடு இந்த தமையன் தம்பியிருவருடைய சிறிய தொகப்பன் விட்டோஜிரு.ஜா தெவகெதியானர். அந்த விட்டோஜி ராஜாவுடைய பிள்ளைகள் எட்டுப்பேரும் நிஜாம் பாதுஷாவை அனுசரிச்சுக் கொண்டிருந்தார்கள்.

89. விட்டோஜியின் பாதுகாப்பில் ஷாஜியும் சரபோஜியும் இருந்தமை பிற வரலாற்றாசிரியர் குறிப்பிடவில்லை.

81. துக்காபாயி என்றவிடத்தில் உமாபாயி என்று போ. வ. ச. கூறும் (பக்கம் 90; எனினும் பிறகு "துகாயி ஆவுசாயேபிற்குப் பிறந்தவராகிய ஏகோஜி மகாராஜா (போ. வ. ச. பக். 62) என்றவிடத்துத் துகாயி என்றமை காணலாம். சிவபாரத சரித்திரத்தில் ஷாஜிராஜா துக்காபா பியை மணந்தமை கூறப் பெறவில்லை. துக்காபாயியை முதற் கலியாணம் செய்து கொண்டார் என்று மெக்கன்சி சுவடிகளும், போ. வ. சவும் கூறியிருக்க. பாலத் (சென். பக்கம் 2-3) 'The first wife was Jijai Aii and the second wife Tukāi Atı" or say *wth. usirums, டிரத்தில் வரலாறு எழுதியோர் ஜிஜாபாயியை முதல் மனைவியாகவே கூறுவர். ஜிஜாபாயியை

இரண்டாவது மனைவி என்று வற்புறுத்திக் கூறுவதன் கருத்து உரிய இடத்தில் கூறப்பெறும்.

82. சகம் 1542:1543 என்று போ. வ. ச. விலுள்ளது. 1543க்குத் துன்மதி பொருந்தும் (சாமிக்கண்ணுப்பிள்ளை). சகம் 1542 என்பது கி. பி. 1620 இகும். மாலோஜி 1619இல் இறந்தார். ஆகவே ஆண்டு ஒருவாறு பொருந்துவதாகலாம், 83. தம்முடைய சொந்த ராஜ்யம் 'சாதரா தேசம்" என்று திருமுடி சேதுராமன் சுவடி கூறும் (பக்கம் 20). 84. யாதவராஜா-லகோஜி ஜாதவ் ராவ், இவர் தேவகிரி யாதவ் அரசமரபினர் சிந்த்கெட் (Sindkhed) பகுதிக்குத் தேஷ்முகி" ஆவர்; அகமது நகரில் 10,000 குதிரைகள் கொண்ட படைக்குத் தலைவர். இவர் ஆதரவில் மாலோஜியும் அவர் தம்பி விட்டோஜியும் இருந்தனர். கி.பி. 1599இல் ஹோலிப் பண்டிகை நடந்த சமயத்தில் மாலோஜி தன் மகன் ஷாஜியுடன் யாதவராஜாவின் விட்டுக்குச் சென்ருர். யாதவராஜாவுக்கு ஒரு மகள் இருந்தாள் - கிகா பாய் என்று பெயர். யாதவராஜி ஷாஜியை அழைத்து ஜிஜாபாயின் அருகில் அமர்த்தி இருலகும் தகுந்த இணையாக உள்ளனர் என்றார். இரு குழந்தைகளும் ஒருவர் மேல் ஒருவர் சந்தனப் பொடியைத் தூவி விளையாடினர். யாதவராஜா "இருவரும் தகுந்த இணை என்று கூறியதைக் கேட்ட மாலோஜி 'யாதவராஜா என்னுடன் சம்பந்தம் செய்ய உடன்பட்டிருக்கிறார்' என்று கூறி னார். இதனை யறிந்த யாதவராஜாவின் மனைவி இதற்கு உடன்படவில்லை. மறுநாள் யாதவராஜா மாலோஜியை விருந்துக்கு அழைத்த பொழுது "ஷாஜியை மருமகனாக ஏற்றுக் கொண்டாலன்றி விருந்துக்கு வரவியலாது' என்று கூறினார். இதனால் இருவருக்கும் மனவேற்றுமை ஏற்பட்டது. இதனையறிந்த நிஜாம்ஷா மாலோஜியை 5000 குதிரைகட்குத் தலைவனாக்கிப் பூனா குடா ஆகியவற்றைச் சாரோகக் கொடுத்து "ராஜா' என்ற பட்டமும் அளித்துப் பெருமைப்படுத்தினார். இதனால் யாதவராஜாவுக்குத் தன் மகளை ஷஹாஜிக்கு அளிக்க ஏதும் தடையில்லை யாயிற்று. 1604இல் இருவருக்கும் திருமணம் நடந்தது - டஃப் (பக்கம் 44-45), கி. பா. (பக்கம் 115-116): 12000 குதிரைகட்குத் தலைவனாக்கினார் என்றும் 1604 ஏப்ரல் திங்களில் திருமணம் நடந்த தென்றும் தகாகாவ் (பக்கம் 13-14) கூறுவர்-இவை மெக்கன்சி சுவடியிலோ, போ. வ. ச.விலோ, சிவபாரதத்திலோ குறிப்பிடப் பெறவில்லை.

85. சரபோசி ராசர் துர்க்காபாயியைத் திருமணம் செய்து கொண்ட செய்தி சிவபாரதத்தில் கூறப்பட்டுள்ளது (பக்கம் 7)