பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

தஞ்சை மராட்டிய

20 பின்னமாய் ஒடிப் போய்விட்டார்கள். சஹஜிருஜா செயத்தை அடைந்து அல்லி யெதல் ஷா வண்டையில் வந்து சேர்ந்தார். அப்போ அல்லியெதல் ஷா மஹா சந்தோஷமாகி சஹஜிரு.ஜாவுக்கு தம்முடைய ருச்சியத்தில் பாதி ராட்சியம் சாகீர் விட்டார்." அதின் பிற்பாடு அல்லியெதல் ஷாவுக்கு சுவாதீனமில்லாமல் இருந்த முத்தேகான்" முதலானவர்களையும் கேரள தேசாதிபதி முதலான எல்லா ருஜாக்களையும் சஹஜிருஜா செயித்து அல்லியெதல் ஷாவுக்கு கப்பம் கட்ட தக்கினையாகப் பண்ணி" கசாளுவிலே பெருதிரவியம் சேரத் தக்கினை யாகப் பண்ணினர்.பிற்பாடு சஹஜிருஜா விசைய துற்க மென்று சொல்லப்பட்ட விஜாபுரத் திலே வாசம் பண்ணிக் கொண்டிருக்கிற நாளையில் அவருடைய இரண்டாம் பூர் ஜிஜாவு வயத்தில் சரலியவாகன சகம் தடுசக" அட்சய வருஷம் முதல் குமாரன் சம்பாஜிருஜா பிறந்தார். அதின்பிற்பாடு கிறமமாக நாலு பிள்ளை கள்' பிறந்துது. ஆனல் அதுகள் வற்திக்கவில்லை. ---

67. பாதிராச்சியம் ஜாகீர் விட்டதாக போ. வ. ச. விலும் (பக்கம் 15), டி 3119 இலும், சிவ பாரதத்திலும் (பக். 14) இருக்கத் திருமுடி சேதுராமன் சுவடியில் 'நாலிலொருபங்கு' (பக்கம் 39) என்றிருக்கிறது.

58. "சுவானேமில்லாமலிருந்த' என்று இங்கும், டி3119இலும் இருக்க "ஸ்வாதினத்திலிருந்து' என்று போ. வ. ச. விலுள்ளது (பக்கம் 15); "ஏதில் ஷாவின் பக்கத்திலிருந்து' என்று பொருள் கொள்ளலாம். சிவபாரதத்தில், 'ஏதில்ஷா தன்னுடைய தகப்பனாருக்கு எதிரியா இருக்கப்பட்ட முத்தேகான்' என்றமையான், முத்தேகான் அலிஏதில்ஷாவின் 'சுவாதீனம் இல்லாமலிருந்தவர்' அதாவது ஏதில் ஷாவுக்கு அடங்காதிருந்தவர் என்பது பெறப்படும். 59. கப்பம் கட்டத் தக்கினையாகப் பண்ணி' என்ற இடத்தில், "குண்டு மரியாதைகளைக் கொடுக் கும்படியாய்ச் செய்து' என்று போ. வ. சவிலுள்ளது (பக்கம் 15):இதற்குரிய போ. வ. ச. மராட்டிப் பகுதி பக்கம் 12 வரி 8இல் "தோஃபா' என்றசொல் காணப்படுகிறது. திருமுடி சேதுராமன் சுவடி யிலும் (பக்கம் 40) தோப்பா கட்டும்படி கண்டித்தார்' என்றுள்ளது. (தோஃபா - கப்பம்“Tribute” : Elizabeth Stranberg, The Modi Documents from Tanjore in Danish Collections, Franz Steiner Verlag, Wiesbaden, 1983, page. 61).

70. ரெண்டாம் பூர் - இரண்டாவது சகா (டி3119): இரண்டாவது மகனவி.

71. சகம் 1541; திருமுடி சேதுராமன் சுவடியில் சகம் 1549 என்று குறிப்பிட்டிருப்பினும் (பக்கம் 41) அதற்கேற்பக் கி.பி. 1624 ரக்தாட்சி என்றது தவறு; இத் கி.பி. 1887 பிரபவ ஆதல் வேண்டும் (சாமிக்கண்ணுப்பிள்ளை), சகம் 1547 அக்ஷய வருஷம் என்று போ.வ.ச. கூறும் (பக்கம் 15); இதுவுந் தவறு: சகம் 1547க்கு உரிய ஆண்டு குரோதன ஆண்டு ஆகும் (சாமிக் கண்ணுப்பிள்ளை), “Sambaji was born in 1619 when Shahji was 25 years old” (Sardesai, page 53) “Shahajihad three sons, of whom the eldest, Sambhaji, was born at Dowlatabad in 1623 to his first wife JijaBai during their residence at that fort” (Takakhav Page 50)

ஷாஜிக்கும் ஜிஜாபாயிக்கும் 1804இல் திருமணம் நடந்தது என்று பக். 116இல் கூறிய கி. பா. பக்கம் 123 இல், ■

“In 1623 Jija Bai bore her lord a son three years after their marriage. He was called Sambhaji”

என்று கூறியது எங்கனம் பொருந்தும் என்று தெரியவில்லை.

72. "ஆறு பிள்ளைகள் பெற்றாள்: அதில் லம்பாஜி, சிவாஜி இருவரும் வம்சத்தரானார்கள்' (சிவபாரதம் பக்கம்12). வற்திக்கவில்லை - வளர்ந்து பெரியவர்களாகவில்லை-(போ.வ.ச.பக். 1ச.)