பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன்னர் வரலாறு

25

 25 திருந்த சனங்கள்’ குறுக்கே வந்து யாதவருஜாவை மறித்து யடிக்கும்போது" யாதவருஜா சொற்கலோக மடைந்தார்." இந்த சேதிகளெல்லாம் சிவனேர் கெடியிலிருந்த சாசிரு.ஜாவுக்குத் தெரிந்து அவர் யோசினைபண்ணினது. நிஜாம் ஷாவுடைய சித்தவிற்த்தி அவ்விவஸ்தையாகயிருக்குது. மந்திரித்தினத்துக்கு வந்த பத்தேகானும் மூற்களுக யிருக்கிருன். யாதொரு நிமித்தியமில்லாமல்" நம்மு டைய மாமனர் யாதவருஜாவை கொண்ணு போட்டார்கள். நாம் இனிமேல் நிஜாம் ஷாவுடைய பேட்டிக்குப் போனலும் இந்தப்பிறகாரமாக நம்மையும் மோசம் பண்ணுவார்களென்று உறுதியாய் யோசினைபண்ணி நிஜாம்ஷாவுடனே சாவாசம் அல்லது சஹாயம் பண்ணுகிறத்தை மனதிலே இருந்து வெறுத்துப் போட்டு" சிவனேர்கெடியிலிருந்த தம்முடைய சமுசாரத்தை எல்லா மழைச்சுக் கொண்டு தம்முடைய சொந்த தேசம் சறதார்’ கெடிக்கு வந்து சேர்ந்தார்.அதின் பிற்பாடு நிஜாம்ஷாவுடைய தேசமெல்லாம் மழையில்லாமல்" குருவிக்கு முதல் யெரைகிடையாமல் பாழடைஞ்சு போய் விட்டுது. அந்த

93. முகமதிய சர்தார்கள் மூவர்: பர்ஹத்கான், ஸஃப்தார்கான், மோதிகான் (சர்க்கார் (1) பக்.28)

94. படிக்கும்போது - அடிதடிகளாய் (டி3119) - 95. பத்தேகான் கூறியதற்கிணங்க யாதவராசா வஞ்சனையால் கொல்லப்பட்டார் என்று இங்குக் கூறியிருக்கச் சர்க்கார் தன் House of Shivaji என்ற நூலில் (பக்கம் 27-28) பத்தேகான் நிஜாம் ஷாவின் ஆணையால் 1638இல் சிறையில் வைக்கப்பட்டார் என்றும், ஜாதவ்ராவ் தன்னைக் காப் பாற்றிக் கொள்ளும் பொருட்டு ஒட நினைத்தார் என்றும், நிஜாம்ஷா தன் அமைச்சர்களாகிய இக் லஸ்கான் ஹமீத்கான் ஆகியவரோடு கலந்து. பர்ஹத்கான், ஸஃப்தார்கான், மோதிகான் ஆகியோரை யாதவராஜாவைச் சிறைப்படுத்த ஏவினர்ர் என்றும். யாதவராசா அரசவைக்கு வந்ததும் நிசாம்ஷா அரசவையினின்று எழுந்து சென்றார் என்றும். மேற்கூறிய மூவரும் யாதவராஜாவையும் அவர் மகன் அச்சல்ஜியையும் தாக்கி அவர்கள் கையகத்திருந்த ஆயுதங்களைக் கவர்ந்ததும் அவ்விரு வரும் தம்மிடமிருந்த கத்தியை உருவிப் போரிட்டனர் என்றும், இறுதியில் ஸப்தர்கான் யாதவராசா வைக் கொன்றார் என்றும், அங்குக் கைகலப்பில் அச்சல்ஜியும் கொல்லப்பட்டார் என்றும் கூறப்பட் டுள்ளன. இக்கொலை 12.8.1830இல் நிகழ்ந்தது (சர்க்கார் (1) பக்கம் 28).

தகாகாவ் பக்கம் 23இல் - பத்தேகான் இடத்தில் தக்ரிப்கான் நியமிக்கப்பட்டார் என்றும். இதனால் நிசாம்ஷாவிடம் வருவதற்கு யாதவராஜா விரும்பினர் என்றும். நிஜாம்ஷா வஞ்சனே தீர்த் துக் கொள்ள இதுவே தக்க சமயம் என்று கருதி யாதவராஜாவைத் தவுலதாபாத்துக்குப் பேட்டிக்கு வரச்சொன்னார் என்றும், யாதவராஜா தன் மகன் அச்சலுடன் வந்தார் என்றும், அவர்கள் வந்ததும் மந்தனத்தின் பொருட்டு நிசாம்ஷா தர்பாரை விட்டு நீங்கினார் என்றும், முகமதிய சர்தார்கள் மூவர் அவர்களிடமிருந்த ஆயுதங்களைப்பிடுங்கிக் கொண்டு அவர்களைக் கொன்றனர் என்றும் எழுதியுள்ளார். சிவபாரதத்தில் (பக்கம் 17-18) மெக்கன்சி சுவடியில் உள்ளது போல் உள்ளது. எனினும் மிகச்சுருக்கமாக உளது.

96. நிமித்தியமில்லாமல் - நேரமில்லாமல் (டி. 119)

97. “When he (Shaji) heard of the treacherous circumstance of his father-inlaw's murder, he saw that it was useless any more to try to get reconciled with the Nizam Shaha or lead the Nizami standards” - (Takakhav, Page 24)

98. சறதார் - சாத்தார் (டி3119)

99. “During the season of 1629-30 no rain fell in the Deccan, and a famine, accompained by a pestilence, ensued” - Duff, Page 51)

“About this time there was a great famine in the Peccan the greatest severity of which fell upon the inhabitants of the Nizam Shahi state. To the

Յ 9-4