பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன்னர் வரலாறு

27

 27 நடத்தையும் யாதவருஜாவை கொண்ணு போட்டத்தையும் சஹஜிருஜா மனஸ் தாங்கலாய் தம்முடைய சீர்மைக்குப் போய்விட்டத்தையும் அறிந்து கொண்டு இப்போ நிஜாம் ஷாவுடைய ருச்சியம் தான் சுவாதீனம் பண்ணிக் கொள்ளலா மென்றெண்ணி நிஜாம் ஷா பேரிலே பாளையமெடுத்தான். அப்போ நிஜாம்ஷா தேவகிரி துற்கத்தை விட்டு தாராகிரி துற்க்கத்திலே யிருந்தார். நிஜாம்ஷாவுடைய ஸ்திதியெல்லாம் அல்லியெதல் ஷாவுக்குத் தெரிந்து நிஜாம்ஷாவுக்கு இனிமேல் இந்த பாக்கியம்' நிற்கமாட்டாது அவன் அபசெயம் அல்லது மரணத்தையாகி லும் அடையுவான் என்கிற யோசனை பண்ணி தாராகிரி கோட்டை மஹாபலம் அப்படிக்கொத்த கோட்டை தரியாகான் கிட்ட அகப்பட்டால் அது நமக்கு பிறதி தினம் நூதின சல்லியமாகு மென்றும் அந்த தாராகிரிகோட்டையைதம்முடைய சுவாதீனம் பண்ணிக் கொள்ள வேணுமென்று அல்லியெதல்ல:ா அந்தக் கோட்டையின் பேரிலே பாளைய மெடுத்தான். இந்த சேதி டில்லிக்குத் தெரிந்து அவடத்தில் அப்போ சாகீர் பாதுஷா மரணத்தை அடைந்து யிருந்தவருடைய பிள்ளை ஆலங்கிரிபாதுஷாவுக்கு பிறதிநாமம் அபறங்கஜேபு என்கிறவருக்குத் தெரிந்து நிஜாம் பாதுஷாவினுடைய அதிகாரத்தை தம்முடைய கவாதீனம் பண்ணிக் கொள்ள வேணுமென்று தாமே பிறப்பட்டு வந்தார். இந்த சேதி யெல்லாம் சாசிரு.ஜாவுக்கு தெரிந்து இதுகள் எப்படி யாகுதென்று. பார்ப்போ மென்று தம்முடைய ஸ்தளத்திலேதானே" யிருந்துவிட்டார்.அப்போ அபறங்கஜேபு என்கிறவர்தம்முடைய தொகப்பனுராலே அனுப்பு விக்கப்பட்ட தரியகானுடனே கூட தாராகிரி கோட்டைக்கு ஒரு பக்கத்திலே மோற்சா போட்டு சண்டை பண்ணினர். அல்லியெதல்ஷா என்கிறவர் ஒரு பக்கத்திலே மோற்சா போட்டு யுத்தம் பண்ணினர். அதில் நிஜாம்ஷாவுக்கு

2. கொண்ணுபோட்டத்தையும் - சுவர்க்கத்தையடைந்ததையும் (டி. 119) 3. மனஸ்தாங்கலாய்-மனஸ்தாபமாய் (டி5119) 4. பாக்கியம் - பிரபுத்துவமும் ஐசுவரியமும் (போ. வ. ச. பக்கம் 18) 5. அபசெயம்-கrணதசை (டிெ) 6. "அல்லது மரணத்தையாகிலும்' - டி3119இல் இல்லை 7. சார்ே-ஜஹாங்ர்ே; இவர் 1605 முதல் 1827 வரை ஆண்ட முகலாய அரசர்.

gaporogir Goßg 7-11-1627 (The Mughul Empire, uéoth 1889. ஷாஜஹான் 24-2-1828இல் ஆட்சி எய்தினார் (டிெ) ஆலங்கிரி - ஆலங்கிர் - அவுரங்கசீபு. இவர் ஜஹாங்கிரின் மகன் ஆகிய ஷாஜஹானின் மூன்றா வது மகனாவர்; தன் தந்தையைச் சிறையிலிட்டு 21-7-1658இல் அரசு கட்டில் எய்தியவர். இவர் தம்

தந்தை ஷாஜஹான் காலத்தில் 24-1-1836இல் தக்காணத்துக்கு அரசப்பிரதிநிதியாக வந்தார் (The Mughul Empire, užsih 20.8)

s. soon - Alamgir, title taken by Aurangazeb on his accession to the throne of Delhi (Index, Records of Fort St. George, Country Correspondence,

1802).

9. போ.வ.ச.பக். 18இல் "சாத்தஜி' என்றுள்ளது; சாஹஜி என்றிருத்தல் வேண்டும்

10. ஸ்தளத்திலேதானே - தானத்திலே (டி5119)