பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன்னர் வரலாறு

29

 29 ஹரிவம்சம்’ ருமாயணம்' யித்தியாதி கிறந்தங்களிலே சவவிஸ்தாரமாகச் சொல்லியிருக்குது. அதிலேயும் சகலவம்சத்துக்கு முக்கியமாயிருக்கிற பிறம்மதேவரிடத்திலிருந்து யிப்பால் சந்திரசூரியாள் வம்சமானர்கள். ஆகிலும் பிறம்மவம்சம்" சூரியவம்சம் சந்திரவம்சத்து ரு ஜா ஒருவருக்கொருவர் கலந்தி ருக்கிற படியினலே முக்கியமாய் பிறும்மவம்சத்தில் மரிச்சி' அவரிடத்திலிருந்து கச்சிபர்" அவருக்கு சூரியநாருயணன்' அவருக்கு வைவச்சுத மனு’ அவருக்கு உத்தானுபாதருஜா’ அவருடைய சந்ததியிலே தாற்மிகருஜா" அவருக்கு ஆறு பிள்ளைகள் அவாளிடத்திலிருந்து ருசவம்சம் உற்பத்தியாயிருக்குது, அப்படியே சூரியவம்சத்திலே ருமசந்திரருடைய பிள்ளைகள் குசலவா? எளிடத்திலிருந்து வம் சம் விஸ்தாரமா யிருக்குது. அப்படியே சந்திரவம்சத்தில்" சந்திரனுடைய பிள்ளை புதன்” அவர் பிள்ளை ஆயு” அவர் பிள்ளை நவுஷன்” அவர் பிள்ளை யேயாதி"கிருஷ்ணன் சரிதை, மன்வந்தரம், சூரியவமிச சரிதம், பூரு, யயாதி, பிரிய விரதன் மரபு, புவி தர்மம் முதலியவற்றை உரைக்கும். இப்பெயரால் மற்ருெரு புராணம் வழங்கும். அதனைத் தேவி பாகவதம் என்பர். அதனைத்தமிழில் அநதாரியப்ப முதலியார் மொழிபெயர்த்துள்ளார். (அபிதான சிந்தாமணி, பக். 1067)

22. அரிவமிசம்: * 23. இராமாயணம் - கம்பராமாயணத்தில் பாலகாண்டத்தில் குலமுறை கிளத்து படலத்தில் சூரியவமிச பரம்பரை கூறப்பட்டுள்ளது.

24. பிரமவமிசம் - பிரமஞதியாக வந்த வம்சம் 25. மரிச்சி - மரிசி - பிரமன் மனத்தில் பிறந்தவர் (அபிதான சிந்தாமணி, பக்கம் 1267)

26. கச்சிபர் - காச்யபர் - இவர் மரிசியின் புதல்வர்: தக்கனது பெண்கள் பதின்மூவரைத் திருமணம் செய்துகொண்டு தேவர்கள் முதல் தாவரம் ஈறாக எல்லா உயிரினங்களையும் ஈன்றவர். இவரால் பூமிக்குக் காசினி என்ற பெயர் வரலாயிற்று. மேலும் சிலரை மணந்து சில இருடியரைப் பெற்றார். 27. சூரியநாராயணர் - இவர் அதிதி (என்ற தக்கன் மகள்) வயிற்றில் பிறந்தவர் விவஸ்வான் என்று பெயர். 28. வைவச்சுத மனு - வைவஸ்வத மனு - இவர் விவஸ்வானின் மகன். மனுக்கள் பதினால்வர்: இவ்வைவஸ்வதமனு அவருள் ஏழாமவர். 29. உத்தானபாதர் - மனுவின் மகனாவர்: சுவாயம்பு மனுவிற்குச் சதரூபியிடம் உதித்த இரண்டாம் குமரன் (அபிதான சிந்தாமணி, பக்கம் 237). 30. தாற்மிக ராசா - தாம்பீக ராசா (போ. வ. ச. பக். 19)

31. குசலவாள் - இராமனின் மக்கள்

32. சந்திர வமிசம் - வில்லிபாரதம் ஆதிபருவம் குருகுலச் சருக்கத்தில் சந்திர வமிச பரம்பரை கூறப் பட்டுள்ளது. சந்திரன் திருமாலின் மனத்தினின்று தோன்றியவன். 'எங்கள் மாதவன் இதயமா மலர் வரூஉம் உதயத் திங்கள்' (குருகுலச் சருக்கம், பாடல் 1) 33. புதன் - சந்திரனின் மகன்: வியாழன் என்னும் தேவகுருவின் பத்தினியான தாரையைச் சந்திரன் கண்டு காதல் கொண்டு கூடிப் புதன் என்ற புதல்வனைப் பெற்றான் (குருகுலச்சருக்கம், செ.6. வை. மு. கோ. உரை) 34. ஆயு - புதனுக்கும் இளைக்கும் புதல்வன் புளுருவா: புரூரவசுக்கு ஊர்வசியிடம் பிறந்தவன் ஆயு (குருகுலச் சருக்கம், செ. 13. குறிப்பு). மனுவின் புத்திரன் இளன்; இவன் ஒரு கால் தேரேறிச் செல் கையில் ஒரு காட்டையடைந்தான். "இங்கு வருபவர் பெண்ணாய் விடுக' என்று பார்வதி தேவி அந்த இடத்தைப்பற்றிக் கூறியிருந்தனள். இளன் அங்கு வந்ததும் பெண் உருப்பெற்று இளை எனப் பெற்றான். 35. நவுஷன் - நவுஷ் (டி3119). நகுடன்: ஆயுவின் மைந்தன் நகுடன். இவன் பற்றற்று நின்று நூறு அசுவமேதம் செய்து தேவந்திரபதவி பெற்றான் (குருகுலச் சருக்கம், செ. 14) 36. யேயாதி - எயாதி (டி3119) - யயாதி. இவன் நகுடன் புதல்வன் (குருகுலச் சருக்கம் செ. 16-17)