பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

தஞ்சை மராட்டிய

36 திரை பண்ணிக்கொண்டிருந்தார்கள் அற்த ருத்திரியிலே அசுப்பிலே" சற்தாற் கூட்டங்கள் டேருவை வந்து சுத்திக்கொண்ட சேதியை" சாஜிரு.ஜாவுடைய சற்தாற்கள் ருஜாவை யெழுப்பிச்சொன்னர்கள். அப்போருஜா சாகிறுதையாய் குதிரைமேலேறிக்கொண்டு தம்முடைய சற்தார்களையும் கூட்டிக்கொண்டு” உயித்தம் பண்ணினர். அப்போருஜா வெகுசண்டை பண்ணி வெகு செனங்களே சேதம் பண்ணினர். கடைசியிலே முஸ்தபகானுடைய சறுதார் பாசிரு.ஜாவுடனே சண்டை பண்ணுகிறபோது பாசிருஜா கையினலே சாசிரு.ஜாவுக்கு காயம் பட்டு குதிரையின் கீழே மூற்சையாய் விழுந்தார். உடனே முஸ்தபகானும் பாசிரு.ஜா வும் சாசிருஜா கிட்டவந்து ருஜாவுக்கு ருெம்பவும்" உபசாரம் பண்ணி முற் சையை தெளிய பண்ணி காயமும் கட்டி ருஜாவை அம்பாரியின் பேரிலே உளுக்காரவைத்து விசையா புரத்தில் அல்லியெதல் ஷா கிட்ட அனுப்பிவித்தார்கள்." அ

95. அசுப்பிலே - திடீரென்று (போ. வ. ச. பக். 24) 98. சேதியை - வர்த்தமானம் (டி3119) 97. சற்தார்களேயும் கூட்டிக்கொண்டு-சறுதாருடனே (டி5119) 98. ருெம்பவும் - மெத்த (டி3119)

99. இங்ங்னம் ஷாஜி சிறைப்பிடிக்கப்பட்டது 25-7-1848 ஆகும் (சர்க்கார் (2) பக்கம் 35)

ஷாஜி கைது செய்யப்பட்டமை பற்றிய பல்வேறு கூற்றுக்கள்:

1. சிட்னிஸ் கூறுவது;- பீஜப்பூர் பாதுஷாவைக்காண்பதற்கு வருமாறு ஷாஜி எழுதிய கடிதத்துக் குச் சிவாஜி சரியான மறுமொழி கொடுக்கவில்லை. ஆதலால் சிவாஜி தனக்கு அடங்காதிருக்கின்ற செய்தியை ஷாஜி பீஜப்பூர் பாதுஷாவிடம் கூறினார். பாதுஷா நம்பவில்லை. பாஜி கோர்படே என்ப வரை அழைத்து ஷாஜியைச் சிறைப்பிடிக்குமாறு ஏவினார். ஷாஜி அப்பொழுது தஞ்சையிலிருந்தார். கோர்படே ஷாஜியை ஒரு விருந்துக்கழைத்து வஞ்சகமாகச் சிறைப் பிடித்தார் (சென். பக்கம் 73). 2. சிவதிக்விஜயம் கூறுவது: சிவாஜி அடங்காமல் எழுதிய கடிதங்களைப் படித்த பாதுஷா பாஜி ராவ் கோர்படே முதோஸ்கர் என்பவரையும் சர்ஜாகான் என்பவரையும் அழைத்து நடந்த செய்திக ளைக் கூறி ஷாஜியைச் சிறைப்படுத்திக் கொணருமாறு ஏவினார். பாஜிராவ் விருந்தொன்று ஏற்பாடு செய்து, ஷாஜியைத் தனிமைப் படுத்திப் பிடித்துப் பாதுஷாவிடம் கொணர்ந்தார். (சென். பக்கம் I & 0-1 & 1 J.

3. பாரசீக மொழியில் எழுதப்பட்ட பிஜப்பூர் வரலாறாகிய பலாதின்-உஸ்-ஸ்லாதின் (Basatin -us-Salatin) என்ற நூலில் பின்வருமாறு காணலாம்:- ஷாஜி. முஸ்தம்பகானுக்குப் பணியாதிருந்த மையின், ஷாஜியைச் சிறைப்படுத்துமாறு பாஜிராவ் கோர்படே என்பவருக்கும் ஜஸ்வன்த்ராவ் ஆஸ்த் கனி (Jaswant Rao Asad Kani) என்பவருக்கும் ஏதல்ஷா ஆணையிட்டார். ஷாஜி தங்கியிருந்த இடத்துக்கு இருவரும் விடியற்கால சென்றனர். இரவு முழுவதும் கேளிக்கையில் கழித்தமையின் ஷாஜி உறங்கிக்கொண்டிருந்தார். இவ்விருவரும் வந்த காரியத்தை அறிந்ததும் ஷாஜி குதிரை மேல் ஏறி ஒட்டம் பிடித்தார். பாஜி கோர்படே துரத்திச் சென்று ஷாஜியைப் பிடித்துக் கொணர்ந்தார். எதல்ஷா இதனையறிந்து அப்சல்கானை அனுப்பி ஷாஜியைத் தன்னிடம் கொணரச் செய்தார் (சர்க் கார் (1) பக். 36).

4. போ. வ. ச. விலும் (பக். 23-25), திருமுடி சேதுராமன் சுவடி யிலும் .(பக். 69-75), மெக்கன்சி சுவடியில் உள்ளவாறு ஏறத்தாழ ஒரே மாதிரியாகவே கூறப்பட்டுள்ளன. பாதுஷா பல தடவையும் வரச்சொல்லியும் ஷாஜி செல்லாமையால் முஸ்தஃபகான் ஏவப்பட்டமை யும், அவன் பெங்களுர்க்குச் சென்று சின்னாள் தங்கியிருந்து நம்பிக்கையுண்டாக்கிப் பின் வஞ்சக மாகப் போர் செய்து கோர்படேயால் கைது செய்தமையும் சிறப்பான செய்திகளாகும்.