பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன்னர் வரலாறு

37

(4) . சஹஜிரு.ஜாவுடைய மூத்த குமாரன் சம்பாஜிருஜா பெங்களூரிலே : யிருந்தவருக்கு முஸ்தபகான் தன் தொகப்பருைக்கு ೬r னின கிறுத்திரமமும் அவரை விசையபுரத்துக்கு அனுப்பிவிச்ச சேதியும் சவவிஸ்தாரமாக கேழ்விபட்டு முஸ்தபகாளுேடே சண்டைக்கு ஆயுத்த மார்ை. முஸ்தபகானும் பெங்களுர் கோட்டையை சாதிக்க வேணுமென்கிற அபேட்சையினலே சண்டைக்கு வந்தான். இருவருக்கும் சண்டையாச்சுது. இந்த சேதி சிவாஜிரு.ஜாவுக்கு தெரிந்து அவர் சேனைகளை முஸ்த்தீது பண்ணிக் கொண்டு அல்லியெதல் ஷாவின் பேரிலே போறதாகயிருந்தார். இந்த ரெண்டு இடத்து சேதியும் அல்லியெதல் ஷாவுக்கு தெரிந்து பல்லாளருஜா வேடருஜா' பத்தே கான் முசேக்கான் இந்த மூணு சற்தார்க்களையும் சேனைகளையுங்" கொடுத்து சிவாஜிருஜா பாச்சாயியுடைய கோட்டைகள் கெடிஸ்தலங்கள் பிடிச்சுக் கொண் டிருக்கிற தெல்லாத்தையும் விடுவிச்சு சிவாஜிரு.ஜாயிருக்கிற புரந்த கெடிக்குப்" போய் அவரைக் கைப்பிடியாக பிடித்துக்கொண்டு வருகிறதென்று கட்டளை யிட்டு அனுப்பிவிச்சான்.

அதின் பிற்ப்பாடு அந்த மூணு சற்தார்களும் சீருேபா னென்கிற கெடிஸ் தலம் சிவாஜிருஜா கட்டிக்கொண்டிருந்ததை" வாங்கி அவடத்தில் வேடபல்லாள

5. சிவபாரதத்தில் (பக். 24-25) மெக்கன்சி சுவடியில் உள்ளவாறு ஓரளவு இருப்பினும் ஷாஜியின் கீழ்க் கர்நாடகப் பகுதி முழுவதும் அடங்கியதென்றும். ஷாஜியின் போக்கினால் பல சிற்றரசர்களுக்கு முஸ்லிம் அச்சம் நீங்கியதென்றும், ரனதுல்லாகான் இறந்த பிறகு கர்னாடகத்துக்கு வந்த பிஜப்பூர்த் தலைவர்கள் ஷாஜி கூறியவண்ணமே நடக்கலாயினர் என்றும், இவற்றை அறிந்த ஏதில்ஷா ஷாஜினியச் சிறைப்பிடிக்குமாறு முஸ்தஃபாகனை ஏவி னார் என்றுமுள்ளது (சிவபாரதம் பக். 24; சர்க்கார் (2) பக்கம் 90-91). .ே முகம்மது ஏதில்ஷா ஏவலின்படி ஜஹார் (Zahur) என்பவரால் 'முஹம்மதுநாமா" என்ற நூல் எழுதப்பெற்றது. அதில் ஷாஜி சிறைப்பிடிக்கப்பட்டமை பற்றிப் பின்வருமாறு உள்ளது:'செஞ்சி முற்றுகை நீடித்தது. இந்நிலையில் ஷாஜி தன் நாட்டுக்குத் திரும்பிச் செல்லவும் தன் சேனைக்கு ஒய்வு கொடுக்கவும் வேண்டுமென்று முஸ்தஃபகானை வேண்டினார். இப்பொழுது செல்வது தகாது என்று அவர் கூறினார். உணவுப் பண்டங்கள் கிடைப்பதரிதாக இருப்பதால் அவர் களால் தாக்குப் பிடிக்க முடியாதென்றும், இசைவாணை எதிர்பாராமலேயே தான் செல்வதாகவும் ஷாஜி கூறினார். ஷாஜியின் கருத்தை யறிந்த முஸ்தஃபகான் தந்திரமாக ஷாஜியைச் சிறைப் பிடித்து அவருடைய பொருள்களையெல்லாம் தன்வசமாக்கிக் கொண்டார் (பார்க்க தகாகாவ், பக், 121-122).

1. யிருந்தவருக்கு - யிருந்தார் அவருக்கு (டி 3119)

2. கேழ்விபட்டு - தெரிந்து கொண்டு (டி 3119)

3. சண்டைக்கு - யுத்தம் பண்ண (டி 3119) 4. அபேட்சையிஞலே - தார்ப்பிரியத்தினலே (டி3119)

பல்லாளருஜா வேடருஜா - வேடருக்கு எசமானளுகிய பல்லாளன் (டி. 119) வேடர்-பேடர். 8. "சேனைகளையும்' என்றதற்குமுன் (டி3119) இல் 'உயுத்த சன்னகமும்' என்பது அதிகமாக

வுள்ளது. 7. புரந்தகெடி - ஸ்தலம் புரந்தார்கெடி (டி3119) 8. கட்டளையிட்டு - ஆக்கியாவித்து (டி3119)

ஒருேபான் - சிருேபா (டி3762), சிருேயில் (டி3119); சிரோபலம் (சிவபாரதம் பக். 28) 10. கட்டிக் கொண்டிருந்தத்தை - கட்டிக்கொண்டு யிருந்தார், அதை (டி3119)