பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42

தஞ்சை மராட்டிய



மேல்வைச்சு சுடுகிற சுத்தானுலா யென்கிற துபாக்கி, பச்சை கலாத்து கொடிய மானையும், பொன் முலாம் பண்ணின ஆனை முகப்பட்டையும், ஆனையுடன் ஆனகொம்பிலே போடுகிற (சனிகை னுமான): யும், பச்சை மகமலுடைய காசு முகப்பட்டையுடன் (பாருவான); இத்தனையும் நிறைந்த சதிரை சஹஜிருஜா வுக்கு இனம் (பண்ணிப்)$ போட்டார்."

சஹஜிருஜா இந்த வெகுமதிகளை யெல்லாம் அடைஞ்சு அல்லியெதல் ஷாவுடைய உத்திரவு வாங்கிக் கொண்டு (சகல பிருது சம்பத்துடனே): யும் சாத்தாருவுக்கு வந்து தன் சமுசாரத்துடன் சுகமேயிருந்தார்.

. (5) . இப்போ சிவாஜிரு.ஜாவுடைய பிறக்கியாதியான சவிஸ்தா ೨::* ரத்தை தெரியப்பண்ணுகிறேன்.

தனது தகப்பனர் சாஜிருஜா அல்லியெதல் ஷாவண்டை (யிலிருந்து): விடுதலை பண்ணிக்கொள்கிறநிமித்தியம் (தன்சுவாதீனமாகயிருக்கப்)8 பட்ட ருச்சியத்தை விட்டு விட்டு சாத்தாராவிலே போயிருந்த பிறகு சிவாஜிரு.ஜா புரந்தர்கெடி யிலேயிருந்தார் (அவர் தன்மந்திரி சு); வற்ணம் என்றும் அல்லது

46 இளும் பண்ணிப்போட்டார் - இனாமாகக் கொடுத்தார்

43 முதல் 45 வரை டி3189க்கும் டி3119க்கும் பல இடங்களில் வேறுபாடுண்டு. போ. வ. ச. பக். 29-30இல் பின்வருமாறு கூறப்பட்டுள்ளன:

"பச்சை நிறமுள்ள வெல்வெட்டுக் கூடாரத்தையும், நகரா என்னும் மெய்க்காப்பாளர் முரசையும், பச்சை வெல்வெட்டினால் செய்யப்பட்ட விதானம் கூடியதும் தங்கம் வெள்ளி இவை களினாற் செய்யப்பட்டதுமான அம்பாரியையும், யானையையும், பாதுஷாவினுடைய உருவிய கத்தி யோடு கூடிய காவலர்களையும், விச்ச சித்தி பரமாவின் குதிரை விருதுகளையும், நவதாம் என்ற பெயருடைய பாதுஷாவின் குதிரை லாயத்திலுள்ள குதிரைகளிற் சிலவற்றையும், அவற்றின் விருது களையும், சில அடையாளச் சின்னங்களையும், 'சந்திர' 'சூரிய என்னும் வாத்தியங்களையும், தங்கம் வெள்ளி இவைகளினால் செய்யப்பட்ட இரகசியக் கூடாரத்தையும், உலோகத் தகடு கொடுத்த பச்சை வெல்வெட்டுத்திரைகளையும், மெத்தை போன்ற அதன் உறைகளையும், பட்டு ஜாலர்களையும், அக்கூடாரத்தின் கால்கள் படிகள் நடைபாதை இவைகளின் மேல் போடும் பல சென வெல்வெட்டு உறைகளையும், நவரெத்தினங்கள் வைத்திழைத்த கலசத்தையும், பட்டு விரிப் புக்களையும், வெல்வெட்டுத்திண்டுகளையும், அடிமனை மெத்தையையும், டேராவின் கீழ் உள்ள பீரங்கி சுமக்கும் ஒட்டகத்தையும், பச்சை நிறமுள்ள அகன்ற துணியில் யானை உருவம் பொறிக்கப்பட்ட கொடிகளையும், தங்கம் வெள்ளி முலாம் பூசப்பட்ட பகதிகளையும், பூ வேலைப்பாடு செய்யப்பட்ட தந்தப்பிடியுள்ள சனியன்' 'என்ற குந்தாயுதத்தையும், மீன் உருவங்களுடன் வெல்வெட்டினால் மூடப்பட்ட ரஸமணி யானையையும், இவைகள் அனைத்தையும் ஷாஹாஜி ராஜாவுக்குச் சன்மான L LiJT## அளித்தார்.'

8 பிறை வளைவுகளில் இருப்பவை டி3 180இல் சரியாகப் புலப்படாமையால் டி 3762 பார்த்துத் தரப்பட்டன.

1. புரந்தர் கெடி - பிறந்தர்கெடி (டி. 119); புரந்தர் கோட்டை (போ. வ. ச. பக். 30). இக் கோட்டை பூனாவுக்குத் தென் கிழக்கில் 18 கல் தொலைவிலுள்ளது. இக்கோட்டையைச்சுற்றியுள்ள பகுதி நீலகண்ட ஹைபத்ராவ் என்பவரிடம் இருந்தது. இவர் இறந்ததும் இவர் மக்களில் மூத்தவர் ஆகிய நீலோபந்த் என்பவர் தனக்குரிய தாக்கிக்கொண்டு தன் தம்பிகள் ஆகிய பீலாஜி சங்கராஜி என்பவர்கட்குரிய உரிமையை அளிக்க மறுத்தார். சிவாஜி இக்கோட்டையைத் தனக்குரியதாக ஆக்கிகொள்ளவேண்டும் என்று நினைத்தார். ஒரு தீபாவளி சமயத்தில் தம்பியர்க்குள்ள மாறுபாட்டு ஆணர்ச்சியை போக்க முயன்றார் சிவாஜியின் முயற்சிகள் பயனளிக்கவில்லை. நீலோபந்த் அயற்சி