பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன்னர் வரலாறு

45

 45

தெய்வம் இவர் சொற்பனத்தில்" செயமாகிற சின்னங்களை" காண்பிவித்துது. அதையும் பார்த்து செயபேரியுமடித்து நல்ல முகுற்தத்தில் விசைய திசமியில் பிறப்பட்டார். விசையதிசமி பண்டிகையில் பிறப்படுவா(னே) னெனில் பொசலெ வம்சத்திலே செயமான நாளதுதானென்று பரம்பரையாக நடந்து வந்தபடியி ேைல அந்த நாளையிலே இவரும் பிறப்படும் போது உத்தம சகுனங்களு மாச்சுது. பிறப்பட்டு செயவல்லி நகரம் போறவரைக்கும் வழிகளிலே சீமுதமான காடும் மலைகளு மிருந்துது. அந்தந்த யிடங்களிலே இருந்த அனேக தேசாதிபதி கள் துற்க்காதிபதிகள் பாளையகாறர்கள் சமேத்துவார்கள்" இவாளனைவரையும் செயித்து செத்துப் போனவர்கள் ஒடிப்போனவர்கள் போக கைப்பிடியாக பிடித்துக் கொள்ளப்பட்டவர்களில்” கொல்லப்பட்டவர்கள் சிறுது, விட்டு விடப்பட்டவர்கள் சிறுது. பத்திரமான இடத்தில் கையிதிலே வைக்கப்பட்டவர் கள் சிறுதுகை அதிலே பெரியருஜாக்கள் பாஜிருஜா" கிஷ்ணருஜா செனகருஜா" சந்திரருஜா இந்த பேர்வழிகள் நாலு ராஷ்யத்துக்கும் டானேயம்" வைத்துப் போட்டு செயவல்லி நகரத்துக்கு வந்து சேர்ந்தார். அந்த பட்டணத்தின் பிற பாவத்தை கொஞ்சம் தெரிய எழுதப்பட்டிருக்குது என்னமென்ருல் சஹறியாமலே அல்லது சையாமலை என்கிற பறுவதத்தின் எல்லையின் கணவாய்க்கு கீழ் ரடத் தொண்டி கணவாய் என்று பேர். அதுடைய இருக்கம் நெருக்க மகா" பிற

20. 'சொற்பனத்தில்' என்தற்குப்பிறகு டி3119 இல் "பிரத்தியட்சமாகி' என்பதுள்ளது 21. சின்னங்களே - சன்னதங்கள் (டி3119)

22. “Hindu tradition of hoary antiquity and from the epic period downwards recognise it (Dasara) as the most auspecious day for the opening of a campaign” - (Takakhav, Page 391)

23. சமேத்துவார்கள் - சிமையதார் (டி3119); ஜமேதார் (போ. வ. ச. பக். 34)

24 முதல் 25 வரை டி3119இல், 'சிலது பேரைக் கொன்றுபோட்டுச் சிலது பேரை விட்டு விடப்பட்டுச் சிலது பேரை பத்திரமான யிடங்களிலேயும் கைதுலேயும் வைக்கப்பட்டது' என்று காணப்படும்.

26;27. பாஜிராஜாவும் கிருஷ்ணராஜாவும் சந்திரராஜாவின் பிள்ளைகள். ஜாவலிக் கோட்டைக் குச் சொந்தமானவர் சந்திரராஜா. சந்திரராஜாவை வென்ற பிறகு அவருடைய இரு மக்களையும் சிவாஜி சிறைப்படுத்திப் பூனாவுக்கு அனுப்பிவிட்டார். அங்கு அவர்கள் கொல்லப்பட்டனர்(சென், பக். 164). ஆனால் ஜாதுநாத் சர்க்கார், பாஜிராவ் கொல்லப்படவில்லை என்பர் (சர்க்கார் (1) பக். 47) அடிக்குறிப்பு 2 காண்க.

28. செனகராஜா யார் என்று தெரியவில்லை. 29. சந்திரராசா ஜாவலியின் தலைவன்

30. “Thanna literally signifies a garrison, but it also means more especially in Deccan history, the military post at which the inferior revenue officers are stationed to protect the eountry, aid the police and collect the revenue, whether the station be a fort of an open village. The cultivators consider him their master who is in possession of thanna; for this reason garrison does not convey the full meaning of thanna”- (Duff, Page 506, Notes for P. 93, line 10)

31. பட்டனத்தின் பிறபாவத்தை - பட்டணத்தினர் பிரஸ்தாபத்தை (டி 3119) 32. ரடத்தொண்டி - நடத்தோண்டி (டி3119); ரணதோண்டி (போ. வ. ச. பக் சிே) 33. நெருக்க மகா - டி3119 இல் இல்லே