பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

தஞ்சை மராட்டிய

45

பலமாக யிருக்கும். அதிலிறங்கி ஒரடி வழியாய வெகுதூரம் வரைக்கும் போப் லோஹ பறுவதத்தின் சிகரத்திலே* ஏறி கீழே பார்க்கும் போது" சிமுதமாய் நெருங்கி யிருக்கிற வனத்தினலே சூரியகிரணம் பட்டபூமி ஒரு மாட்டுக் குளம் படி நில முதலாய் தெரிய வரவில்லை. இருண்ட யிடமாயிருந்துது. அப்படிக் கொத்த வன துற்க்கத்தின் ஆவரணத்தின் நடுவே செயவல்லிப்பட்டணம். அதுக்கு சமீபத்தில் பிறதாபதுற்கம். அதையுஞ் செயித்து அந்தப்பட்டணத்துக்கு மேலே யெழுதியிருக்கப்பட்ட" சந்திர ருஜாவையுந் துரத்தி சுவாதீனம் பண்ணிக் கொண்டு செயவல்லி நகரத்திலே பிறதாப துற்கத்திலேயும் டானேயம் வைத்துப் போட்டு தாம் அப்பால் மேற்குச் சமுத்திரக் கரையிலிறங்கி அந்தக்கரை ஒர மாய் தண்ணியிலே ஒரு கோட்டை யெடுப்பிவித்து அதுக்கு சிவலங்கை யென்று பேர்வைத்து அதில் செனங்களுங் குடியேத்தி நவரத்தின கெஜிதமான ஒரு சிம்மாசனத்தை உண்டுபண்ணி அதின்பேரிலே தாம் ஏறிக் கொண்டு தன்பே ாால் சிவசக மென்று பேர்வைச்சு தன்னுடைய அதிகாரத்துக் குள்ப்பட்ட தேசம் ஒரட்டுக்கும் அந்தப்படியே கணக்கும் எழுதவைத்து தாம் அவடத்திலே யிருந்தார்.

அந்த செயவல்லி நகரத்து சந்திரருஜா" அல்லியெதல்ஷா வண்டையில் வந்து சேர்ந்து சிவாஜிரு.ஜாவுடைய சவுரியமும் தயிரியமும் நடத்தைக ளெல் லாத்தையும் அவருக்குத் தெரியபண்ணின்ை. அந்த அல்லியெதல்ஷா" மஹா ஆச்சரியப்பட்டு யிதுவரைக்கும் சிவாஜிருஜா இன்ன இடத்தி லிருக்கிருரென்று ஒருத்தருக்கும் தெரியாமலிருந்துது. சந்திரருஜா சொன்னதின்பேரில் அல்லி யெதல் ஷாவுக்கு மகா ஆச்சரியமும் அதிக பொருமை"யு மதிகமாக யெந்த விதத்திலேயும் சிவாஜிருஜாவை காலி பண்ணவேனும், யில்லாமல் போகுல் தம்முடைய அதிபத்தியம் நிற்கிறது கடினமென்று நிச்சயம் பண்ணி அவர்கிட்ட பிருக்கப்பட்ட பனிரெண்டு வசிர்களிலே முக்கியமாய் இருக்கப்பட்ட வஜிர் அப்சல்கான் அல்லது அப்துல்லாகா' னென்று பேர். அவனே அழைப்பிவித்து

4. சிகரத்திலே - கொடுமுடி (டி. 119) 15. பார்க்கும்போது - இறங்கும்போது (டி. 119) 16. பட்டனத்துக்கு மேலேயெழுதியிருக்கப்பட்ட - பட்டனத்து (டி3119)

7. ஜாவலிக்குரிய சந்திரராவ் மோரேயின் மக்கள் கிருஷ்ணாஜி. பாஜி என்ற இருவர் ராயிரி Rairi) கோட்டையில் இருந்தனர். சிவாஜி அக்கோட்டையைப் பிடித்து ராய்காட் (Raigarh) என்று பெயரிட்டு அவ்விருவரையும் பூனாவுக்கு அனுப்பினார். கிருஷ்ண்ாஜி சில மாதங்கட்குப் பிறகு கால்லப்பட்டார். பாஜி 28-8-1686 இல் சிறையினின்று தப்பியோடிச் சந்திரராவ் என்ற தம் குடிப் பெயரைப்பூண்டு பீஜப்பூரை யடைந்தார் (சர்க்கார் (1) பக். 44.47) அடிக்குறிப்பு 17, 18 காண்க.

8. இந்நாளில் பீஜப்பூர் அரசராக இருந்தவர் அலி அடில் ஷா 11. இவர் மிக்க இளைஞர் ஆயினமையின் |வருடைய தாய் ஆட்சிப்பொறுப்பி லிருந்தார். அவர் கேdi லாஹேபா என்று வழங்கப்பெற்ருர் தகாகாவ் பக். 15 1).

9. அதிக பொருமை - ஈரிஷை (டி3119)

0. அஃப்சல்கானுக்கு அப்துல்லா படாரி (Abdulla Bhatari) என்பது இயற்பெயர் (சர்க்கார் 1) Lá. 58). “He was reported to be an illegitimate son of the late Muhammad

hah, his mother having been a cook in the royal kitchen. He was governor f Wai 1649 - 1654”- (Sardesai, Page 123)