பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

iii

1896இல்-எழும்பூரில் உள்ள அருங்காட்சியகத்துக்கும் மாற்றப்பட்டு, 1939 ஜனவரி யில் இப்பொழுதுள்ள கிழக்கியல் சுவடிகள் நூலகமாக அமைக்கப்பட்டுப் பாது காக்கப்பட்டு ஆய்வாளர்கட்குப் பெரிதும் பயன்பட்டு வருகின்றன."

தமிழ்ச் சுவடிகள் 1379 என்று மேற்கண்ட அரசினர் கிழக்கியல் சுவடிகள் நூலகத்தினின்று 1951இல் வெளியான பட்டியிலிலிருந்து தெரிகிறது. இவை வெவ்வேறு சுவடிகளாக இருப்பினும் வெவ்வேறு நூல்கள் அல்ல. ஒரு சுவடிக்கு ஒன்றுக்கு மேற்பட்ட சுவடிகளும் உண்டு. உதவியாளரின் வழி படியெடுத்துப் பெறப்பட்ட சுவடிகள் பலவற்றையும் மெக்கன்சி மீண்டும் படியெடுக்கச் செய்தமையால் சுவடிகள் பல்கிக் காணப்படுகின்றன."

o வில்லியம் டெய்லர் 1835இல் வரலாற்றுச் சுவடிகள் என்ற நூலை இரு பகுதிகளாக வெளியிட்டதுடன், கி.பி. 1857 இல் ஒரு பெரிய பட்டியலை விளக்கக் குறிப்புக்களுடன் வெளிப்படுத்தினார்."

வில்சன் என்பார் மேக்கன்சி தொகுப்புக்கள் என்ற நூலை 1882இல் வெளியிட்டார். இதில் ஒவ்வொரு சுவடி பற்றியும் குறிப்பு உண்டு.

மெக்கன்சியின் தமிழ்ச் சுவடிகளுக்குரிய அகரவரிசைப் பட்டியல் 1951இல் அச்சிடப்பெற்றது. அச்சுவடிகளுக்குரிய விளக்கமான குறிப்புக்கள் 1948 இல் வெளியான ஏழாவது தொகுதியிலும், 1953-இல் வெளியான எட்டாவது தொகுதியிலும், 1954இல் வெளியான ஒன்பதாம் தொகுதியிலும், 1955இல் வெளியான பத்தாவது தொகுதியிலும், 1960இல் வெளியான பதினொ ராம் தொகுதியிலும் காணப்படுகின்றன. இவ்விளக்க அட்டவணையால் அகர வரிசைப் பட்டியலில் இடம்பெறாத 155 சுவடிகள் காணப்பெறுகின்றன என்று முனைவர் ம. இராசேந்திரன் தன் ஆய்வேட்டில் பட்டியலிட்டுக் காட்டியுள்ளார்."

மெக்கன்சி சுவடிகளுட் சில, கிழக்கியல் சுவடிகள் நூலக வாயிலாக அச் சிட்டு வெளிப்படுத்தப்பட்டுள்ளன. கர்நாடக ராசாக்கள் சவிஸ்தார சரித்திரம்." கேரள தேச வரலாறு, கொங்க தேச ராசாக்கள் சரித்திரம்." சோழன் பூர்வ பட்டயம்.' தென்னிந்தியக் கோயில் சாஸனங்கள் என்பவை அவை.

5. இராசேந்திரன், பக்கம் 51-53, 8. | பக்கம் 61. 7. அடிக்குறிப்பு 4 காண்க. s. William Taylor, Catalogue, Raisonnee, Oriental Manuscripts, Madras, 1857. 9. Wilson, H.H., Wilson's Mackenzie Collection, 1882. 10. இராசேந்திரன், பக்கம் 288-294. 11. அகரவரிசைப் பட்டியல் வரிசை எண் 125; டி 2768 வெளியீடு ஆண்டு 1952

Io. FF H or 219, ஆர் 401 HH I 96 ዐ

I J. F. H. | H HR 227 டி 8158 F 1950

14. FF H HF 1073; டி 2981 | || 1950