உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தந்தையின் ஆணை.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசைத்தம்பி 73. பெற்றவைகள்! இந்த விஷப்பூச்சிகளின் மூச்சு யார் மேல் பட்டாலும் மீள முடியாது. இதுகளால் அழிந்த மக்கள் தொகை, குடும்பங்களின் எண்ணிக்கை கோடானு கோடி! அதிலே நடராஜன் குடும்பம் சிக்கியது. சேகரின் படிப்புக்கு, குடும்பச் சிலவுக்கு நடராஜன் வாங்கிய பணத்திற்கு, இதுவரை வட்டிதான் அடைப்பட்டிருந் தது: மீதி பணத்திற்கு மார்வாடி ஜப்தி வாரண்டுடன் வந்திருந்தான். இரக்கம் என்றால் என்ன அர்த்தம் என்று கேட்கும் வர்க்கந்தானே, பண மூட்டைகள் ! , ஆனால் -அந்த மார்வாரியிடம் கருணை இருந்தது என் றுதான் சொல்லவேண்டும் ! விரும்பி இருந்தால் நடராஜ னின் வீட்டையே பறித்திருக்கலாம்! அந்த மார்வாடி பரோபகாரியாக இருக்கப்போய் சாமான்கள் மட்டிலும் ஜப்தி அதிகாரத்தை ஏவினான்! வீட்டில் உள்ள ஒவ் வொரு சாமானும் வெளியே தூக்கி வைககப்பட்டன. மாணிக்கம் ஓடிவந்தான்: தன் வீட்டுசாமான் தலை விரிகோலமாய் தெருவில் கிடப்பதை கண்டான்; அவனை அறியால் ஆத்திரம் பொங்கியது. மார்வாடியை அடிக்க ஓடினான். 64 தம்பி ! இங்கே வா! முடியாது, இந்தக்கூட்டத்தையே நாட்டை விட்டு ஓட்டவேண்டும்! .. நீ கடனாளி! அவன் முதலாளி! ' ஆம்! சுரண்டி சுகம் பெற்றவனை சும்மா விடக் கூடாது! 61 தொல்லையை விலைக்கு வாங்காதே வா இங்கே'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தந்தையின்_ஆணை.pdf/74&oldid=1741036" இலிருந்து மீள்விக்கப்பட்டது