ஆசைத்தம்பி 75 அழுதுகொண்டே வள்ளியம்மாள் நடராஜனிடம் முறையிட்டாள். அம்மா ! சேகரைப்பற்றி பேசவேண்டாம்! வேறு ஏதாவது சொல்லுங்கள் செய்கிறேன்." P வெறுப்புடன் கோபமாகவே இந்த பதிலை கொட் டினான் நடராஜன்; இதைக் கேட்டுக்கொண்டிருந்த லீலா சப்தம்போட்டு அழ ஆரம்பித்தாள்; வள்ளியம்மையால் தாங்க முடியவில்லை. .4 லீலா அழுது அழுது சாகனும்னு நினைக்கிறாயா? உன் தாய் சொல்றேன்: சேகரைத் தேடப்போகிறாயா. இல்லையா ?... கொஞ்சம் கடுமையாகவே வள்ளியம்மாள் கேட் டாள்; அதைக் கட்டளையாகவே கருதினான் நடராஜள். 22. ஆராய்ச்சி. டாக்டர் சேகருக்கு எந்த நேரமும் மருந்து ஆராய்ச் சிதான். நோயாளிகளை பெரும்பாலும் நளினாவையே கவனிக்கச் செய்தான் சேகர் ! விசிட்டிங்கூட தான் அதிக மாக போவதில்லை. ரொம்பவும் மோசமான நிலையில் யாரும் வந்தால்தான் சேகர் கவனிப்பது வழக்கமாயிருந் தது. இதனால் விருதுநகர் மக்களிலே பலருக்குக்கூட சேகரைத் தெரியாமல் இருந்தது. ஏதாவது 0 பார்ட்டி, பெரிய உத்தியோகஸ்தர், மந்திரி ஆகியோர் சம்பந்தப்பட்ட எந்த நிகழ்ச்சிக்கும் சில பெரிய மனிதர்கள் (!) செல்வதுபோல சேகர் செல்வதே இல்லை. நேரத்தை வீணாக்காமல் சதா ஆராய்ச்சிதான். நளினா வும் சேகரும் ஒரே பங்களாவில் வாழ்ந்தும்கூட அதிக நேரம் ஒருவரோடொருவர் பேசிக்கொண்டிருக்கவே நேரமிருப்பதில்லை. 10
பக்கம்:தந்தையின் ஆணை.pdf/76
Appearance