பக்கம்:தந்தையும் மகளும்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

98

தந்தையும்

அம்மா! உன்னுடைய உள்ளங்கையில் ஐந்தாறு வெள்ளி ரூபாயைப் பரப்பி வைத்துப்பார். அப்பொழுது அதிகக் கனமாகத் தோன்றாது. ஆனால் அதே ஐந்தாறு வெள்ளி ரூபாயையும் ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி உள்ளங்கையின் நடுவில் வைத்துப்பார். அப்பொழுது அவை முன்னிலும் அதிகக் கனமாகத் தோன்றும். முன்னால் வைத்த ரூபாய்கள் தாமே, அதிகக் கனமாகத் தோன்றக் காரணம் என்ன? முன்னால் அவை ஒன்றாகச் சேர்ந்திராமல் பாவியிருந்தன. அதனால் அவற்றின் அழுத்துதல் பரவியிருந்தது. அதனால் கனமாகத் தோன்றவில்லை. இப்பொழுது அவை ஒரே இடத்தில் சேர்ந்து அழுத்துவதால் கனமாகத் தோன்றுகிறது.

நாம் பையில் பொருள்களை இட்டுக் கைப்பிடியைப் பிடித்துத் தூக்கிக் கொண்டு போகும் போது பூமியின் ஆகர்ஷண சக்தி பையைக் கீழே இழுக்கிறது. நம்முடைய கை அந்தச் சக்தியை எதிர்த்துக் கொண்டிருக்கிறது. கயிற்றுப் பிடியாயிருந்தால் பூமி இழுப்பது ஒரே இடத்தில் தாக்குகிறது. அதனால் பையைத் தூக்கிப் போவது கஷ்டமாயிருக்கிறது.

ஆனால் கைப்பிடி மரமாயிருந்தால் அப்பொழுது பூமி இழுப்பது கையில் அதிகமாகப் பரவியே யிருக்கும். அதனால் பையைத் தூக்கிப்போவது அதிகக் கஷ்டமாயிராது அதனால் தான் பைகளுக்கு மரப்பிடியைப் போடுகிறார்கள்.

94 அப்பா! அப்பளம் பொரிக்கும்போது அது பெரிய குமிழியாக ஆகிவிடுகிறதே, அதற்குக் காரணம் என்ன?

அம்மா! அப்பளம் செய்வதற்கான மாவை நன்றாகப் பிசைந்து ஒரு சதுரக் கல்லில் வைத்து இடிப்பார்கள்.