பக்கம்:தந்தையும் மகளும்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மகளும்

109

தான் நாம் பார்க்கும் பொருள் போட்டோப் படம் போல் தட்டையாக இல்லாமல் நிஜ உருவத்துடன் காண்கிறது.

நீ சொல்லுகிறாயே தெருவில் காட்டுவதாக, அந்தப் படங்களும் கண்களில் விழும் பிம்பங்கள் போல் எடுக்கப்பட்ட படங்களே. இரண்டு காமராக்களை சிறிது விலகி இருக்கும்படி வைத்துக் கொண்டு ஒரு பொருளைப் படம் பிடிப்பார்கள். பிறகு அந்த இரண்டு படங்களையும் அடுத்தடுத்து வைத்துக் கொண்டு அதற்காக உண்டாக்கப்பட்ட கண்ணாடிகள் மூலம் பார்த்தால் நமக்குத் தெரிவது தட்டையான படமாக இராமல் நிஜ உருவமாகவே இருக்கும். இத்தகைய கருவியைத்தான் தெருவில் கொண்டுவருவது. அதை முதன் முதலாக ஆங்கில விஞ்ஞானியான ஸர் சார்லஸ் விட்ஸ் டோன் என்பவரே 1832-ம் ஆண்டில் செய்தார்.

107 அப்பா! சென்னையில் லைட்ஹவுஸில் உள்ள பெரிய கோபுரத்தில் இரவு நேரங்களில் ஒரு வெளிச்சம் தெரிகிறதே, அதன் காரணம் என்ன?

அம்மா! அதை ஆங்கிலத்தில் "லைட் ஹவுஸ்" என்றும் தமிழில் "கலங்கரை விளக்கு" என்றும் கூறுவார்கள். அது எதற்காக வைத்திருக்கிறார்கள் தெரியுமா? இரவு நேரத்தில் கடலில் பிரயாணம் செய்யும் கப்பல்களில் உள்ளவர்களுக்கு இன்ன இடத்தில் கரையிருக்கிறது என்று தெரிய வேண்டாமா? தெரிந்தால்தானே கரையில்வந்து மோதிக்கொள்ளாதவாறு கப்பலை ஒட்ட முடியும்? நாம் சாலையில் போகும்போது சாலைகளிலுள்ள விளக்குகள் நம்மைச் சாலையின் ஓரங்களில் போய் விழுந்து