பக்கம்:தந்தையும் மகளும்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

112

தந்தையும்

அம்மா! தந்தி யந்திரம் எப்படி வேலை செய்கிறது என்பதை நான் உன் அண்ணனுக்குச் சொன்னேன். அது *குழந்தைகள் கேள்வியும் பதிலும்” என்னும் புத்தகத்தில் அச்சாகியிருக்கிறது. அதை நீ படித்திருப்பாய். தந்தி அடிக்கும்போது சில சங்கேத ஒலிகள் உண்டாகும். அவ்வொலிகளைக் கேட்கக் கேட்க அவற்றிற்குரிய எழுத்துக்களை கையால் எழுதிக்கொண்டு போவார்கள்.பிறகு அதை யார் பேருக்குத் தந்தி வந்திருக்கிறதோ அவருக்கு அனுப்புவார்கள்.

ஆனால் இப்பொழுது தந்தியில் செய்திகளை வேறு விதமாக அனுப்புகிறார்கள். சென்னையிலிருந்து திருச்சிக்கு தந்தி அனுப்பவேண்டுமானால் சென்னையில் ஒரு டைப் அடிக்கும் யந்திரமும் திருச்சியில் ஒரு டைப் அடிக்கும் யந்திரமும் இருக்கும். அவை இரண்டையும் மின்சாரத்தால் இணைத்திருப்பார்கள். சென்னையிலுள்ள டைப் யந்திரத்தில் டைப் அடிப்பதுபோல் கையால் அழுத்திக் கொண்டிருப்பார். அவர் எழுத்துக்கள் மீது அழுத்த அழுத்த திருச்சியிலுள்ள டைப் இயந்திரத்திலுள்ள கடுதாசியில் எழுத்துக்கள் டைப் அடிக்கப்பெறும். அந்தக் கடுதாசி நாடா மாதிரி குறுகலாகவும் நீண்டு மிருக்கும். டைப் அடித்து முடிந்ததும் அதைத் தந்திக்கான காகிதத்தில் ஒட்டி அனுப்புவார்கள்.

110அப்பா! மாமா வாங்கி வந்துள்ள கடிகாரத்தில் இருட்டில்கூட மணி தெரிகிறதே அதற்குக் காரணம் என்ன?

ஆமாம், அம்மா! சில கடிகாரம் இருட்டில்கூட மணி காட்டும். ஏதேனும் கண்ணுக்குத் தெரிய வேண்டுமானால்அதிலிருந்து ஒளி புறப்பட்டு நம்முடைய கண்ணுக்கு வந்துசேரிவேண்டும் என்று படித்திருக்கிறாய் அல்லவா? அப்படியானால் அத்தகைய கடிகாரத்தின் முட்களில்