பக்கம்:தந்தையும் மகளும்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மகளும்

113

ஒளியேது, அதிலிருந்து ஒளி நம்முடைய கண்ணுக்கு வரவேண்டுமானால் கடிகாரத்துக்குள் சிறு விளக்கு ஏதும் வைத்திருக்கிறதோ என்று கேட்பாய்.

ஆனால் விளக்கு எதுவும் கிடையாது. அதற்குப்பதிலாக அந்த முட்களின் மீது போலோனியம் என்னும் ஒரு பொருளைப் பூசி இருக்கிறார்கள். அந்த வஸ்து ரேடியம் என்னும் வஸ்துவின் இனத்தைச் சேர்ந்தது. அந்த வஸ்துக்கள் சுயமாகவே பிரகாசம் உடையவை. அந்த வஸ்துக்களைக் கண்டுபிடித்தவர் பிரஞ்சு தேசத்தில் இருந்த பிரபல விஞ்ஞானியான கூரி அம்மையார். அவர் முதன் முதல் கண்டு பிடித்த வஸ்து போலோனியம் என்பது. அவருடைய சொந்த நாடு போலந்து. அதனால் அந்த வஸ்துவுக்குத் தம்முடைய நாட்டின் பெயரையே இட்டார்.

111அப்பா! சினிமாக் கொட்டகையில் சிவப்பாகக் கூர்மையாக ஒன்று சுவரில் மாட்டிவைத்திருக்கிறார்களே, அதற்குக் காரணம் என்ன?

அம்மா! சினிமாக் கொட்டகையில் ஏதேனும் திடீரென்று நெருப்புப் பிடித்துவிட்டால் அதை அணைப்பதற்காகவே அந்தச் சாதனத்தை வைத்திருக்கிறார்கள். அதற்கு "நெருப்பு அணைப்பான்” என்று பெயர். நெருப்பு எரிவதற்குப் பிராணவாயு இன்றியதையாதது என்றும் நெருப்பு எரியும்போது உண்டாகும் கரியமிலவாயு

நெருப்பை அணைத்து விடும் என்றும் அறிவாய். இந்த நெருப்பு அணைப்பானைக் கொண்டு கரியமிலவாயு உண்டு பண்ணி அதைக் கொண்டு நெருப்பை அணைக்கிறார்கள். அது எப்படி என்று சொல்லுகிறேன்; கேள். சிவப்பாக உள்ள கருவி பலமான பித்தளையால் செய்தது. நாம் தோசைமாவில் கலக்கும் சோடா உப்பு

த- 8