பக்கம்:தந்தையும் மகளும்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மகளும்

119

அம்மா! சில வருஷங்களுக்கு முன் வரை சுண்ணாம்புக் கல்லைக் காளவாயில் இட்டுச் சுட்டு அதன்பின் அதைத் தண்ணீர் சேர்த்து அந்த நீற்றுடன் மணலும் நீரும் கலந்து சாந்தாக்கி உபயோகித்து வந்தார்கள். அச்சாந்தைக் காரை என்று கூறுவார்கள். ஆனால் சாந்து தண்ணீர் படும் இடங்களில் இடிந்தும் கரைந்தும் போகக்கூடியது. சிமிண்டோ தண்ணீரில் கரையாது, அதற்குப் பதிலாக அதிக உறுதியே பெறும். தண்ணீர் படப்படத்தான் சிமிண்டுக்கு அதிக பலம். அதனால்தான் ஸ்நான அறைக்கு சிமிண்டு உபயோகிப்பது நல்லது என்று கூறுகிறார்கள்.

117அப்பா! அம்மா குளத்திலிருந்து தண்ணீர் கொண்டு வந்ததும் அதில் ஏதோ ஒரு கொட்டையை உரைத்துக் கரைக்கிறாளே, அதற்குக் காரணம் என்ன?

அம்மா! குளத்து ஜலம் கலங்கலாக இருக்கிறது, அதைக் குடிக்க முடியாதல்லவா? அதை எப்படித் தெளிய வைக்கிறது. ஒன்றும் செய்யாமல் வைத்திருந்தால் அது தெளியமாட்டாது, கலங்கலாகவே இருக்கும்.

அதற்காக அம்மா! தேற்றாங்கொட்டை என்று ஒரு கொட்டை கடையில் விற்கிறார்கள். அந்தக் கொட்டையைக் கல்லில் உரைத்து அதை வழித்துத் தண்ணீரில் கலக்கி வைத்திருந்தால் தண்ணீர் தெளிந்துவிடும், குடிக்க நன்றாயிருக்கும்.

தேற்றாங்கொட்டை கிடைக்காவிட்டால் அதற்குப் பதிலாக படிக்காரம் என்று ஒரு பொருள் இருக்கிறது. அதைத் தூளாக்கி தண்ணீரில் போட்டு வைக்கலாம். அப்பொழுது படிக்காரம் தண்ணீரில் கலங்கி நிற்கும் பொருள்களைக் கீழே படியும்படி செய்து விடுகிறது.