பக்கம்:தந்தையும் மகளும்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மகளும்

123

எண்ணெய் விளக்கில் எண்ணெய் திரியில் ஏறி, ஆவியாக மாறி எரிகிறது. அப்படி உண்டாகும் ஆவி முழுவதும் பிராணவாயுவுடன் சேர்ந்து எரிந்தால் அப்பொழுது புகை கிடையாது. ஆனால் உண்டாகும் ஆவியில் ஒருபாகம் எரி யாமல் இருந்துவிட்டால் அதுதான் புகை. நாம் விளக்கை அணைத்தால் அப்பொழுது உண்டான ஆவி எரியமுடியாமற் போகிறது. அது புகையாகக் கிளம்பி அறை முழுவதும் பரவி விடுகிறது அதனால் தான் நமக்குப் புகை நாற்றம் தெரிகிறது.

அம்மா! சாதாரணமாகக் குத்துவிளக்கை அணைத்தால் அதில் புகையும் உண்டாகாது, அதிக நாற்றமும் பரவாது. ஆனால் மண்ணெண்ணெய் விளக்கை அணைத்தாலோ அதிக நாற்றம் உண்டாகிக் கஷ்டம் தரும். அதனால் அத்தகைய விளக்கை அணைக்க வேண்டுமானால் முதலில் திரியைக் கீழே இறக்கிக்கொண்டு அணைக்கவேண்டும். அப்படிச் செய்தால் எண்ணெய் ஆவி அதிகமாக இராது, நாற்றம் பரவாது.

123அப்பா! மண்ணெண்ணெய்பைக் கரியடுப்பைப் பற்றவைக்க உபயோகித்தாலும் கரியடுப்பைப் பற்றவைத்தபின் உபயோகிக்கக்கூடாது என்று கூறுகிறார்களே, அதற்குக் காரணம் என்ன?

அம்மா! கரியடுப்பைப் பற்றவைக்கக்கூட மண்ணெண்ணெய் உபயோகிக்க வேண்டியதில்லை. மண்ணெண்ணெய் திரிமூலம் ஆவியாக வந்து எரித்தால்தான் அதன் புகை நமக்குக் கெடுதல் செய்யாது. அப்படிக்கின்றி துணியில் மண்ணெண்ணெய்யைத் தோய்த்துக் கரியடுப்பைப் பற்ற வைக்கும்பொழுது மண்ணெண்ணெயப் புகை அதிகமாக உண்டாகி நமக்குக் கேடுசெய்யும். கரியடுப்பில் கழிவு கடுதாசிகளை சிறிது சிறிதாகக் கிழித்து கரிக்கு அடியே கொஞ்ச கொஞ்சமாக எரித்தால் கரி சீக்கிரம் தணல் ஆய்விடும்.