பக்கம்:தந்தையும் மகளும்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மகளும்

129

இதற்கு ஒரு முறையை பிரஞ்சுக்காரர்கள் 19ம் நூற்றாண்டின் மத்தியில் கண்டு பிடித்தார்கள். அது தண்ணீரில்லாமல் செய்யும் முறையாயிருப்பதால் "உலர்ந்த சலவை முறை” என்றும், பிரஞ்சுக்காரர்கள் கண்டு பிடித்ததால் "பிரஞ்சுச் சலவை முறை" என்றும் பெயர் பெறும்.

உலர்ந்த முறை என்பதைக் கொண்டு எவ்வித திரவமும் உபயோகிப்பதில்லை என்று எண்ணி விடாதே, நீருக்குப் பதிலாக வேறு திரவங்கள் உபயோகிக்கப்படும். முதலில் பெட்ரோலை உபயோகித்தார்கள். ஆனால் அது எளிதில் தீப்பிடிக்கக் கூடியதாயிருப்பதால் வேறு சில திரவங்களை உபயோகித்தார்கள், ஆனால் அவைகள் விலையுயர்ந்தனவாக இருப்பதால் அவைகளையும் உபயோகிப்பதில்லை. இப்பொழுது இந்த இரண்டு குணங்களும் இல்லாத திரவங்களை உபயோகிக்கிறார்கள்.

துணிகளை இந்தத் திரவங்களில் இட்டால் அவை துணியிலுள்ள எண்ணெய் அழுக்குகளை நீக்கி விடும். அதன் பின் தூசிகளைப் புருசு கொண்டு நீக்கிவிடலாம், இந்தக் காரியங்களை இக்காலத்தில் யந்திரங்களைக் கொண்டே செய்கிறார்கள்.

130அப்பா! சோப் குமிழிகளில் வானவில் போல் அழகான நிறங்கள் தோன்றுகின்றனவே, அதற்குக் காரணம் என்ன?

அம்மா! சூரிய ஒளி சரலாந்தர் கண்ணாடி போன்ற முப்பட்டைக் கண்ணாடி வழியாகச் சென்றால் அப்பொழுது அது ஊதா, கருநீலம், நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு என்ற ஏழு நிறக்கதிர்களாகப் பிரிந்து தோன்றுகின்றன. வானவில் உண்டாவது மழைகாலத்தில் தான்மழைத் துளிகள் முப்பட்டைக் கண்ணாடிகள் போல் இருந்து சூரியனுடைய வெண்மையான ஒளியை ஏழு நிறங்களாகத் தெரியுமாறு செய்து விடுகின்றன.

த-9