பக்கம்:தந்தையும் மகளும்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மகளும்

133

புகையாகப் போகிறதாம். அந்தப் புகை அதிகக் கறுப்பாயிருப்பதற்குக் காரணம் நிலக்கரியிலுள்ள எண்ணெய்ச் சத்து ஆவியாகி கரித்தூளுடன் கலந்து வருவதேயாகும்.

134அப்பா! சில சோப்புக்களை நல்லவை என்றும் சில சோப்புக்களை நல்லவை அல்ல என்றும் கூறுகிறார்களே, அதற்குக் காரணம் என்ன?

ஆம், அம்மா! நல்ல சோப்புக்களைத்தான் நாம் உபயோகிக்கவேண்டும். சோப்பு என்பது எண்ணெய்யும் சோடாக்காரமும் சேர்த்துக் செய்த பொருளாகும். தேங்காய் நெய் அல்லது ஆலிவ் நெய் போன்ற நெய்களைக் கொண்டு செய்யும் சோப்புக்கள் நல்லவை. அத்துடன், காரம் சேர்த்தே சோப்புச் செய்தாலும் சோப்பில் காரம் இருக்கக்கூடாது. காரம் இருந்தால் உடம்பில் நமைச்சல் உண்டாகும்படி செய்யும். அதிலும் சிறு குழந்தைகளுக்குக் கொஞ்சங்கூடக் காரமில்லாத சோப்பையே உபயோகிக்கவேண்டும்.

துணிகளைச் சலவை செய்ய வேண்டுமானால், பருத்தித் துணிகளுக்குக் காரமுள்ள சோப்பானாலும் பாதகமில்லை ஆனால் பட்டுத் துணிக்கும் ரோமத் துணிக்கும் காரமில்லாத சோப்புதான் வேண்டும். காரமிருந்தால் அது அந்து விதமான துணிகளைச் சீக்கிரமாக நைந்து போகும்படி செய்துவிடும். அத்துடன் ரோமத்துணி மிருதுவாயிருப்பது போய் சுருங்கிக் கட்டியாய்விடும்.

அதனால்தான் உடம்பு குளிக்க ஒருவித சோப்பும்' பருத்தித்துணி சலவைசெய்வ ஒருவித சோப்பும் பட்டு,ரோமத் துணிகளைச் சலவைசெய்ய ஒருவித சோப்பும் செய்கிறார்கள். அதைப் பார்த்து வாங்கி உபயோகிப்பது தான் நல்லது.